அன்புமணியின் அரசியல் இதுதானா..? - பாமக எம்எல்ஏ அருள்..!
சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆவார். இவர் இன்று சேலம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் வடுகம்பட்டி பகுதியில் கட்சியின் நிர்வாகி துக்க நிகழ்விற்கு சென்று விட்டு தன் ஆதரவாளர்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது அன்புமணி தரப்பினர் சட்டமன்ற உறுப்பினரின் காரை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த அருளின் ஆதரவாளர்கள் ஐந்து பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்த எம்.எம்.ஏ அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கொலை செய்யும் நோக்கில் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். 50க்கும் மேற்பட்டோர் நடத்திய தாக்குதலில் 6 கார்கள் சேதமடைந்துள்ளது. அன்புமணியின் அரசியல் இதுதானா?. இதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம்” என்றார்.