"ஒரு கட்டத்தில் தெலுங்கு படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்தேன் , ஆனால்..” - நடிகை மிருணாள் தாக்குர் அதிர்ச்சி தகவல்!
"ஒரு கட்டத்தில் தெலுங்கு படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்தேன்” என நடிகை மிருணாள் தாக்குர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
மராத்தி படங்களில் அறிமுகமான நடிகை மிருணாள் தாக்குர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த சீதா ராமம் படத்தின் தமிழ் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றார். இந்தத் திரைப்படம் பான் இந்தியப் படமாகவும் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து லஸ்ட் ஸ்டோரிஸ் 2 தொடரில் நடித்த மிருணாள் தாக்குர் தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது தில் ராஜூ தயாரிப்பில் பரசுராம் பெட்லா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ஃபேமிலி ஸ்டார் படத்தில் மிருணாள் தாக்குர் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஃபேமிலி ஸ்டார் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மிருணாள் தாக்குர் பேசியதாவது
மாற்றுத் திறனாளிகள் போன்ற நிலைதான் தற்போது எனக்கு உள்ளது. ஏனெனில் எனக்கு தெலுங்கு மொழி தெரியாது. அது என்னை மிகவும் தொந்தரவு செய்கிறது. அதனால் நான் ஒரு கட்டத்தில் தெலுங்கு படங்களில் நடிப்பதையே கைவிட நினைத்தேன். நிஜமாகவே மனதுக்குள் அழுதுவிட்டேன். எனது ஒவ்வொரு கண்ணீர் துளியும் எனக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தன.
இதுபற்றி காஷ்மீரில் சீதாராமம் படப்பிடிப்பின்போது துல்கர் சல்மானிடம் சொன்னேன். 'சீதா ராமம்தான் எனது முதலும் கடைசியான தெலுங்கு படம். வேறெந்த படமும் தெலுங்கில் நடிப்பதாக இல்லை' எனக் கூறினேன். அதற்கு துல்கர் என்னைப் பார்த்து, 'கவலைப்படாதே பார்த்துக் கொள்ளலாம்' என்றார். அவர் கொடுத்த நம்பிக்கைதான் இன்று தமிழ், கன்னட மொழிகளிலும் நடிக்கிறேன் என்றார்.