For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“குறைந்தபட்ச அடிப்படை ஒழுக்கங்களையாவது கற்றுக்கொள்ளுங்கள்” - நடிகை த்ரிஷா குறித்த அவதூறுக்கு விஷால் கண்டனம்!

09:05 AM Feb 21, 2024 IST | Web Editor
“குறைந்தபட்ச அடிப்படை ஒழுக்கங்களையாவது கற்றுக்கொள்ளுங்கள்”   நடிகை த்ரிஷா குறித்த அவதூறுக்கு விஷால் கண்டனம்
Advertisement

நடிகை த்ரிஷா குறித்த அவதூறுக்கு, நடிகர் சங்க பொதுச்செயலாளரும், முன்னணி நடிகருமான விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், நடிகை த்ரிஷாவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு அதிமுகவை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த பிரச்சனைக்கு இயக்குநர் சேரன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த பிரச்னை குறித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில், “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது. அவர் மீது தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய சட்ட நடவடிக்கை அனைத்தும் உடனடியாக மேற்கொள்ளப்படும்” என பதிவிட்டு தனது கண்டனத்தை தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர் திரையுலகைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசியதாகக் கேள்விப்பட்டேன். நான் சம்பந்தப்பட்ட உங்கள் பெயரையோ, நீங்கள் குறிவைத்த நபரின் பெயரையோ குறிப்பிட மாட்டேன். ஏனென்றால் நீங்கள் விளம்பரத்திற்காக இதைச் செய்தீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

நான் நிச்சயமாக பெயர்களைக் குறிப்பிட மாட்டேன். ஏனென்றால் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமல்ல. திரையுலகில் பரஸ்பர சக கலைஞர்களாகவும் இருக்கிறோம். உங்களுக்கு மனசாட்சி இல்லாவிட்டாலும், நீங்கள் செய்த காரியத்திற்குப் பிறகு, உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் உங்களுக்கு சிறப்பான வரவேற்பை அளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

பூமியில் இருக்கும் இத்தகைய தீய சக்திக்கு பதிலடி கொடுக்க ஒரு ட்வீட் போடுவது எனக்கு உண்மையிலேயே வேதனை அளிக்கிறது. நீங்கள் செய்தது முற்றிலும் தகுதியற்றது. உண்மையைச் சொன்னால், நான் உங்களைக் கண்டிக்க விரும்பவில்லை. ஆனால் நீங்கள் இதற்கான தண்டனை அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறேன். 

ஒருமுறை நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையில் இந்த அறிக்கையை வெளியிட விரும்பவில்லை. ஆனால் பூமியில் உங்களால் முடிந்தவரை ஒரு மனிதனாக நீங்கள் ஒருபோதும் இருக்க முடியாது. நிச்சயமாக, இது பிரபலங்களைப் பற்றிய எதிர்மறையான விளம்பரத்தில் பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் ஒரு போக்காக மாறிவிட்டது. குறைந்த பட்சம் சில அடிப்படை ஒழுக்கங்களையாவது கற்றுக்கொள்ளுங்கள்”

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement