For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கலப்பட உணவு விற்றால் குறைந்தது 6 மாத சிறை; ரூ.25,000 அபராதம் - நாடாளுமன்ற நிலைக் குழு அறிவிப்பு!

10:36 AM Nov 15, 2023 IST | Web Editor
கலப்பட உணவு விற்றால் குறைந்தது 6 மாத சிறை  ரூ 25 000 அபராதம்   நாடாளுமன்ற நிலைக் குழு அறிவிப்பு
Advertisement

கலப்படமான உணவு அல்லது பானங்களை விற்பனை செய்வோருக்கு குறைந்தபட்சம் 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.25,000 அபராதம் விதிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

Advertisement

கலப்படமான உணவை விற்பனை செய்வோருக்கு தற்போது 6 மாதம் வரையில் சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும், கலப்படமான உணவால் பொதுமக்கள் உடல்நலனில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அத்தகைய உணவை விற்பனை செய்வோருக்குத் தற்போது வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லை.

இதையும் படியுங்கள்:நாளை முதல் சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள்! – அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல்…

 எனவே இதற்கான தண்டனையை உயர்த்த முடிவு செய்துள்ளோம்  என உள்துறை விவகாரங்களின் நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவரும் பாஜக எம்.பி.யுமான ப்ரிஜ்லால் தெரிவித்தார்.

மேலும் பாரதிய நியாய சம்ஹிதா  2023  மசோதாவின் கீழ் (இந்திய தண்டனைச் சட்டம் 1860) குற்றவாளிகள்  'சமூக சேவைகள்'  மேற்கொள்வதை ஒரு தண்டனையாக வழங்கும் சட்டத்தையும் நாடாளுமன்ற நிலைக்குழு வரவேற்றுள்ளது.
இதுகுறித்த தெளிவான நடைமுறைகளை நாடாளுமன்றக் குழு விரைவில் வெளியிடும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags :
Advertisement