#AssemblyElections | ஜம்மு & காஷ்மீர் இறுதிகட்ட தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு!
ஜம்மு காஷ்மீரில் இறுதி கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் அக்.1ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல்கட்டமாக கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 61.38 சதவீத வாக்குகள் பதிவானது. இதனையடுத்து, கடந்த செப்.25ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 56 சதவீதம் ஓட்டு பதிவாகி இருந்தது. தொடர்ந்து, 3வது மற்றும் இறுதி கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இதையும் படியுங்கள் : #2025IPL மெகா ஏலத்திற்கான விதிமுறைகள்!
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. காஷ்மீரில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து களத்தில் நிற்கிறது. மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து போட்டியிடுகிறது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலகிறது. அங்கு வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8ம் தேதி நடக்க உள்ளது.