For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சட்டப்பேரவைத் தேர்தல் : மிசோரம் , சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

07:38 AM Nov 07, 2023 IST | Web Editor
சட்டப்பேரவைத் தேர்தல்   மிசோரம்   சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது
Advertisement

மிசோரம்  மற்றும் சத்தீஸ்கரில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான  வாக்குப்பதிவு தொடங்கியது.

Advertisement

அக்டோபர் 9ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் அறிவித்தார்.

  • சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தார்.

மேலும்  ராஜஸ்தானில் நவம்பர் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்  என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் தேர்தல் தேதியை நவம்பர் 25ம் தேதிக்கு மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

‘சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் சுமார் 6,000 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் சுவாமி ஆத்மானந்தா ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்படும், சக்ஷம் யோஜனா(Saksham Yojna) திட்டத்தின் கீழ் பெண்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

ரூ. 500 மானிய விலையில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படும். சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சுகாதார உதவித் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்திருந்தது.

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று  நடைபெறுகிறது. அதேபோன்று, மிசோரம் மாநில சட்டபேரவையும் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறவிருக்கிறது. இன்று காலை சரியாக 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மாவோயிஸ்ட் பிரச்னை சத்தீஸ்கர் மாநிலத்தில் இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கன்னி வெடி தாக்குதலில் 3பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.  சத்தீஸ்கரில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதி இன்று தொடங்கியது. சத்தீஸ்கரில் முதல் கட்டமாக 5,304 வாக்குச் சாவடிகளில் 40 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

அதேபோல மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு தொடங்கியது.

Tags :
Advertisement