Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Assam | 20 அடி உயர சுவர்… வெறும் பெட்ஷீட், லுங்கி மட்டும் தான்… அசால்ட்டாக சிறையில் இருந்த தப்பிய கைதிகள்…!

11:42 AM Oct 12, 2024 IST | Web Editor
Advertisement

அசாம் சிறையில் இருந்து 5 விசாரணை கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள மோரிகான் மாவட்ட சிறையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதிகள் 5 பேர் நேற்று இரவு சிறையில் இருந்து தப்பியோடினர். இதுகுறித்து போலீசார் வெளியிட்ட தகவலின்படி, சைபுதீன், சைருல் இஸ்லாம், நூர் இஸ்லாம், மபிதுல் மற்றும் அப்துல் ரஷீத் ஆகிய 5 கைதிகளும் தங்கள் சிறைக்கதவை உடைத்துக் கொண்டு, போர்வைகள் மற்றும் லுங்கிகளைக் கொண்டு சுமார் 20 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவற்றில் ஏறி தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை கைதிகள் தப்பியோடிய விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறையின் ஜெயிலர் பிரசாந்தா சையிகா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது அந்த சிறைக்கு கவுகாத்தியில் இருந்து தற்காலிகமாக 2 துணை ஜெயிலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கைதிகள் தப்பிய விவகாரம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தப்பியோடிய கைதிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தப்பியோடி கைதிகளுடன் இருந்த மற்ற சிறைக்கதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
assamBedsheetsjailLungisnews7 tamilPolicePrison
Advertisement
Next Article