ஆசியக் கோப்பை போட்டி - 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
17-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் ’ஏ’ மற்றும் ’பி’ என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் போட்டியின் 2-வது நாளான நேற்று இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமீரகம் அணி 13.1 ஓவரில் 57 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அமீரகத்தை 57 ரன்னில் முடக்கிய இந்திய அணி அந்த இலக்கை 4.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.