Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அசன்சோல் தொகுதி பாஜக வேட்பாளர் பவன் சிங் திடீர் விலகல் - போட்டியிடவில்லை என X தளத்தில் பதிவு!

02:07 PM Mar 03, 2024 IST | Web Editor
Advertisement

பிரபல போஜ்பூரி பாடகரும் அசன்சோல் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பவன் சிங் திடீரென விலகுவதாகவும் போட்டியிடவில்லை எனவும் தனது  X தளத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சியினர் இறங்கியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக பாஜக சார்பில் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் களம் இறங்க உள்ள அக்கட்சியின் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் இன்று (02.03.2024) வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக தேசியப் பொதுச் செயலாளர் வினோத் தவ்டே வெளியிட்டார்.

அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள 195 பேர் அடங்கியுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில்

இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் மாநில வாரியாக பார்த்தால்,

என மாநிலவாரியாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பல நட்சத்திர வேட்பாளர்களும், தற்போதைய அமைச்சர்களும், முன்னாள் முதல்மைச்சர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகி ஒருநாள்கூடா ஆகாத நிலையில் இன்று திடீரென்று அசன்சோல் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். பிரபல போஜ்பூரி பாடகரான பவன் சிங் அசன்சோல் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் வினோத் தவ்டே அறிவித்தார். இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களால் தன்னால் போட்டியிட முடியவில்லை என அறிவித்துள்ளார்.

Tags :
AsansolBhojbpuri SingerBJPBJP CandidatecandidateElection2024Pawan Sing
Advertisement
Next Article