ஸ்வாதி மாலிவால் மற்றும் துருவ் ரத்தேவின் தொலைபேசி உரையாடல் உண்மையா?
This News Fact Checked by 'BOOM'
ஸ்வாதி மாலிவால் மற்றும் துருவ் ரத்தேவின் தொலைபேசி உரையாடல் வைரலான நிலையில், அது ஒரு டீப்ஃபேக் என்பது அம்பலமாகியுள்ளது.
ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்பி ஸ்வாதி மாலிவால் மற்றும் யூடியூபர் துருவ் ரத்தே ஆகியோர் பேசிக்கொண்ட தொலைபேசி உடையாடல் என்று கூறி ஒரு ஆடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வைரல் கிளிப்பில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் முன்னிலையில் தான் எப்படி தாக்கப்பட்டேன் என மாலிவால் விளக்குவதையும், அதை வீடியோ எடுக்க வேண்டாம் என்று ரத்தேவிடம் கோருவதையும் கேட்கலாம்.
BOOM ஆனது இரண்டு வெவ்வேறு முறையில் அதாவது AI தொழில்நுட்ப முறைகளான Itisaar மற்றும் Contrails - ஆகியவற்றின் வாயிலாக ஆய்வு செய்ததில், வைரலாகும் ஆடியோ AI ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தது. மேலும் இது மாலிவால் மற்றும் ரத்தே இடையேயான உண்மையான உரையாடல் அல்ல என்பதும் உறுதியானது.
மே 13 அன்று, டெல்லி காவல்துறைக்கு அளித்த புகாரில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், முதல்வர் இல்லத்திற்குள் தன்னைத் தாக்கியதாகக் மாலிவால் கூறினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த குமார், தனது புகாரின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். டெல்லி போலீசார் குமாரை 2024 மே 18 அன்று கைது செய்தனர், அவர் தற்போது போலீஸ் காவலில் இருக்கிறார். இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து யூடியூப் துருவ் ரத்தே வீடியோ ஒன்றை வெளியிட்டார், மேலும் மாலிவாலின் புகார் போலியானது என்று குற்றம் சாட்டினார். இந்த பின்னணியில் வைரலான ஆடியோ பதிவு பகிரப்பட்டு வருகிறது.
X - பயனர் ஒருவர் AI - தொழில்நுட்பத்துடன் உருவாக்கிய ஆடியோவை இந்தி தலைப்புடன் பகிர்ந்துள்ளார். அதில் டெல்லி ஸ்வாதி மாலிவால் மற்றும் துருவ் ரத்தேவின் ஆடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில், கெஜ்ரிவால் மற்றும் சுனிதாவின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.
ட்வீட் பதிவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் . அதே கூற்று பேஸ்புக்கிலும் பகிரப்பட்டது.
உண்மை சோதனை
BOOM ஆடியோவைக் கவனமாகக் கேட்டது. மேலும் சில முரண்பாடுகளைக் கண்டறிந்தது. அது அந்த ஆடியோ செயற்கையாக இருப்பதை உறுதிப்படுத்தியது. மேலும் மாலிவாலின் குரலில் 0:09 பகுதியில், அவரது குரல்கள் ஒன்றின் மேல் ஒன்படிறாகப் பதிந்த ஒரு ஜம்ப்-கட் உள்ளது. இதிலிருந்து குறிப்பை எடுத்துக் கொண்டு, ஜோத்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) உருவாக்கிய டீப்ஃபேக் கண்டறிதல் கருவியான இடிசார் மூலம் ஆடியோ கிளிப்பை இயக்கினோம். அக்கருவியின் முடிவுகள் ஆடியோ ஒரு முழுமையாக போலியானது என்று உறுதியாக பரிந்துரைத்தது.
BOOM ஆடியோ கிளிப்பை Contrails இல் உள்ள டீப்ஃபேக் ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பிய போது, அவர்கள் வைரல் ஃபோன் அழைப்பானது ஒரு AI ஆடியோ ஸ்பூஃப் என்பதை எங்களுக்கு மேலும் உறுதிப்படுத்தியது, மேலும் ஸ்வாதி மாலிவால் மற்றும் துருவ் ரத்தே ஆகியோரின் AI குரல் குளோனிங்கின் தெளிவான வடிவங்களைக் கொண்டிருந்தது உறுதியானது.
Note : This story was originally published by 'BOOM' and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.