For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஆர்யன் கான் பிறந்த போது ஜாக்கி சான் போல இருந்தான்” - ஷாருக்கான்!

12:31 PM Aug 12, 2024 IST | Web Editor
“ஆர்யன் கான் பிறந்த போது ஜாக்கி சான் போல இருந்தான்”   ஷாருக்கான்
Advertisement

தனது மகன் பிறந்த போது பார்ப்பதற்கு ஜாக்கி சான் போலவே இருந்ததாக ஆர்யன் கான் குறித்து நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். 

Advertisement

சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் ஆண்டுதோறும் 'லோகார்னோ திரைப்பட விழா' நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் 77-வது லோகார்னோ திரைப்பட விழா நடைபெற்றது. இதில் நடிகர் ஷாருக்கானுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது. மேலும் அங்கு, அவர் நடித்த படங்களின் சில காட்சிகளும் திரையிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஷாருக்கான் உடன் ரசிகர்களின் கேள்வி, பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அப்போது லோகார்னோ திரைப்பட விழாவின் கலை இயக்குநரான ஜியோனா ஏ நஸ்ஸாரோவுடன் ஷாருக்கான் பேசும்போது, தனது மகன் ஆர்யன் கான் பிறந்தபோது நடிகர் ஜாக்கி சான் போன்று இருந்ததாக தெரிவித்துள்ளார்.

எனக்கு விருப்பமான நடிகர்களுள் எப்போதும் ஜாக்கி சான் இருப்பார். அவர் நன்கு நடிப்பவர். அற்புதமானவர். என்னை எப்போதும் ஊக்கப்படுத்துவார். எனது முதல் ஆர்யன் கான் பிறந்தபோது அவரது முகச்சாடையையே ஒத்திருந்தான். அவன் ஜாக்கி சான் போல் இருப்பதை நான் உணர்ந்தேன். ஆர்யனும் ஜாக்கி போல வளருவான் என அவனுக்கு டேக்வாண்டோ பயிற்சி அளித்தேன். அவன் ஜாக்கி சான் போலவே இருக்க வேண்டும் என நான் நினைத்தேன்.

3,4 ஆண்டுகளுக்கு முன் அவரை சௌதி அரேபியாவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் நினைத்ததை போலவே, இனிமையான குணம் கொண்டவராக இருந்தார். மிகவும் அடக்கமாக இருந்தார்” என பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement