Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

’அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்த நாள்’- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
08:52 AM Aug 16, 2025 IST | Web Editor
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கெஜ்ரிவால் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். மக்களுக்கு உங்கள் சேவையில் நல்ல ஆரோக்கியமும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன். உங்கள் தலைமை பொது குடிமக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை தொடர்ந்து வலுப்படுத்தட்டும்”

என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நட்புடன் இருந்து வருகின்றனர்.  கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு, மாதம்தோறும் உதவித்தொகையாக 1,000 ரூபாய் வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் நடந்த இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக அப்போது  டெல்லி முதல்வராக இருந்த  அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
AamAdmiPartyaravinkejriwalCMStalinDelhiDMKTamilNadu
Advertisement
Next Article