Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அமலாக்கத்துறை கைது சட்ட விரோதமானது” - அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு!

08:10 PM Mar 23, 2024 IST | Web Editor
Advertisement

அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

Advertisement

டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.

இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், கடந்த மார்ச் 21-ம் தேதி கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், மார்ச் 22-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் அவரை மார்ச் 28-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அத்துடன் மார்ச் 28-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அவரை ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. கெஜ்ரிவாலை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரிய நிலையில் 6 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த வழக்கை நாளை (மார்ச் 24) விசாரணைக்கு எடுக்க வேண்டுமென அவர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
AAPArrestArwind KejriwalDelhi highcourtDelhi liquo rpolicycaseEnforcement DirectoratePetition
Advertisement
Next Article