Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்.1 வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!

04:30 PM Mar 28, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  அவரை 28-ந் தேதி (இன்று) வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.  அமலாக்கத்துறை காவல் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரிய அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.  அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேலும் 4 நாட்களுக்கு கெஜ்ரிவாலின் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே,  சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதனை விசாரித்த நீதிமன்றம்,  இவ்விவகாரத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க முடியும்,  நீதிமன்றம் எவ்வாறு,  இதில் தலையிட முடியும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Aam Aadmi PartyAravind kejriwalDelhiDelhi CMEDEnforcement DirectorateRouse Avenue Court
Advertisement
Next Article