Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் தலையிட முடியாது” - அமலாக்கத்துறை கோரிக்கையை மறுத்த உச்சநீதிமன்றம்!

01:45 PM May 16, 2024 IST | Web Editor
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் பிரசாரத்தில் தலையிட முடியாது என அமலாக்கத்துறையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

Advertisement

டெல்லி அரசின் மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால பிணையில் தற்போது உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.  பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தலுக்காக பிணையில் வெளிவந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த வழக்கின் பிரதான கோரிக்கை தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் இன்று (மே 16) நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் துஷார் மேத்தா, “தேர்தல் பிரசாரங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு பொதுமக்கள் வாக்களிக்கவில்லை என்றால், தான் மீண்டும் ஜூன் 2-ம் தேதி சிறைக்கு செல்ல நேரிடும் என்று பேசி வருகிறார். இதனை அனுமதிக்க கூடாது” என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதி, “தீர்ப்பை விமர்சிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.  நீதிமன்றம் அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை. நீதிமன்றம் யாருக்கும் சலுகை காண்பிக்கவோ, விதிவிலக்கு அளிக்கவோ இல்லை. சட்டப்படியான உத்தரவுகள் தான் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதனை ஏற்பதும், ஏற்காததும் உங்கள் விருப்பம்” என்று தெரிவித்தனர்.

வழக்கு விசாரணையின் போது ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதாக நீதிபதி மீண்டும் சுட்டிக்காட்டினர்.

Tags :
Arvind KejriwalcampaignDelhiElections2024Loksabha Elections 2024News7Tamilnews7TamilUpdatesSCISupreme court
Advertisement
Next Article