கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: மேலும் 1.48 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கும் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அக்கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான தகுதி வாய்ந்த பயனாளிகளை கண்டறிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சுமார் 1.70 கோடி விண்ணப்பங்கள் வரை பெறப்பட்ட நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், நிராகரிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்ய வழிவகைகள் செய்யப்பட்டன. அடுத்தடுத்த மாதங்களில் பலரும் இணைக்கப்பட்டதால் பயனாளர்கள் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சம் ஆனது. இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதால் இன்று (ஜூலை 15) முதல் மேலும் 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் : அவரே திருடுவாராம்… அவரே கேஸும் கொடுப்பாராம்… ரூ.6 லட்சம் திருடுபோனதாக நாடகம் – புகார் அளித்தவரே சிக்கியது எப்படி?
கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதம் தோறும் 15 ஆம் தேதி பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில் இன்று புதிதாக மேல்முறையீடு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதியவர்களுக்கும் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.