For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள், 'முற்றிலும் மாநில நிதியால் செயல்படுத்தப்படுகிறது" - தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு!

01:03 PM Feb 20, 2024 IST | Web Editor
கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள்   முற்றிலும் மாநில நிதியால் செயல்படுத்தப்படுகிறது    தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு
Advertisement

‘கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம்’ மற்றும் 'கலைஞர் கனவு இல்லம்'  ஆகியவை முற்றிலும் மாநில நிதியால் மட்டுமே செயல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.

Advertisement

மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறொரு பெயர் கொடுத்து மாநில அரசு புதிய திட்டங்களாக அறிமுகம் செய்யதுள்ளது எனவும்  மத்திய அரசின் 'Smart Cities' திட்டத்தை நகர்ப்புற மேம்பாட்டு திட்டமாகவும்,  வீடற்றோருக்கு வீடு வழங்கும் 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தை 'கலைஞர் கனவு இல்லம்' எனும் திட்டமாகவும் மாற்றி அறிமுகம் செய்ததாக சமூக வலைதளத்தில் சிலர் பரப்பினர்.

இந்த நிலையில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம்' மற்றும் 'கலைஞர் கனவு இல்லம்' ஆகிய திட்டங்கள் முற்றிலும் மாநில நிதியால் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:

சீர்மிகு நகரங்கள்

"இந்தியாவில் 100 நகரங்களை தேர்வு செய்து,  தமிழ்நாட்டில் சென்னை உட்பட 11 மாநகராட்சிகளைச் சீர்மிகு நகரங்களாக (Smart City) மாற்றும் திட்டமிது.  2015 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இத்திட்டம் ஒன்றிய அரசும் மற்றும் மாநில அரசும் 50:50 பங்கீட்டின் அடிப்படையில் செயல்படுகிறது.

கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள நகர்புற உள்ளாட்சிகளிடையே உள்ள வளர்ச்சி இடைவெளியைக் குறைக்க, 121 நகராட்சி மற்றும் 528 நகர பேரூராட்சிகளிலும் இத்திட்டம் அமலிலுள்ளது.  இந்த திட்டத்திற்கான முழு நிதியும் தமிழ்நாடு அரசே வழங்குகிறது.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் என்பது ரூ.1.2 லட்சம் வழங்கும் திட்டமாகும்.  இதில் ரூ.72,000 ஒன்றிய அரசும்,  ரூ.48,000 தமிழ்நாடு அரசும் வழங்குகின்றன.  ஒன்றிய அரசு வழங்கும் தொகை போதாது என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு,  கான்கிரீட் கூரை அமைப்பதற்காக கூடுதலாக ரூ.1,20,000 வழங்குகிறது.  ஆக, இத்திட்டத்தில் மொத்தம் ரூ.2,40,000 ஒரு பயனாளிக்கு வழங்கப்படுகிறது.  மேற்கண்ட ரூ.2.4 லட்சத்தில் தமிழ்நாடு அரசு 70% தொகையை வழங்குகிறது. ஒன்றிய அரசு 30% மட்டுமே தருகின்றது.

கலைஞர் கனவு இல்லம்

இத்திட்டத்தின் முதல் கட்டமாக 1 லட்சம் வீடுகள் தலா ரூ.3.50 லட்சம் செலவில் இவ்வாண்டில் கட்டப்படும்.  தமிழ்நாடு அரசே ஒட்டுமொத்த நிதியையும் வழங்கும்.  கிராமப்பகுதிகளில் ஏழை, எளிய மக் மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் இதுவாகும். 2030 ஆம் ஆண்டுக்குள் மிழ்நாடு' என்ற 'குடிசைகள் இல்லா தமிழ்நாடு' என்ற இலக்குடன் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட இருக்கின்றன பயனாளிகளுக்கு வீடு கட்ட நிலம் இல்லாவிடில், நிலத்தையும் அரசே வழங்குகிறது.

ஒன்றிய அரசின் நலத்திட்டங்களை பெயர் மாற்றி மாநில அரசின் திட்டமாக அமலாக்கவில்லை. எனவே தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement