"மதுரை எம்.பி சு.வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை வெளியிட்ட மநீம தலைவர் கமல்ஹாசன்!
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான அட்டவணையானது வெளியாகி உள்ளது. அதில், வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட வாக்குபதிவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இதனையடுத்து, தேர்தல் பிரச்சார வேலைகளில் தேசிய, மாநில கட்சிகள் தீவிரம் கட்டி வருகிறது.
இதையும் படியுங்கள் : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில்கூற வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்!
இந்நிலையில், மதுரையில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன்(54) போட்டியிட்டார். சுமார் 14.41 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். சுமார் 28 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றி வரும் சு.வெங்கடேசன், மீண்டும் அதே மதுரை தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதையடுத்து, மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். இது தொடர்பாக அவர் X தளத்தில் பதிவிட்டதாவது :
"மத பேதமின்றி நாற்பதாண்டுகளாய் நற்பணிகள் செய்து வருகிறோம். மக்களை நேசிப்பவர்களிடம் அரசியல் அதிகாரமும் கிடைத்தால் இன்னும் அழுத்தமாய் நற்காரியங்களைச் செய்யலாம் என்பதை தோழர் சு.வெங்கடேசன் ஆற்றிய களப்பணிகள் காட்டுகின்றன.
மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினராக தோழர் சு. வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன்"
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
இன, மத பேதமின்றி நாற்பதாண்டுகளாய் நற்பணிகள் செய்து வருகிறோம். மக்களை நேசிப்பவர்களிடம் அரசியல் அதிகாரமும் கிடைத்தால் இன்னும் அழுத்தமாய் நற்காரியங்களைச் செய்யலாம் என்பதை தோழர் @SuVe4Madurai ஆற்றிய களப்பணிகள் காட்டுகின்றன.
மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினராக தோழர் சு. வெங்கடேசன்… pic.twitter.com/bjHM9B6mKf
— Kamal Haasan (@ikamalhaasan) March 24, 2024