For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மீண்டும் கடிதம்!

07:06 PM Jan 24, 2024 IST | Web Editor
இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்  வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மீண்டும் கடிதம்
Advertisement

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவித்திடவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி,  மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள், IND-TN-10-MM-769 மற்றும் IND-TN-10-MM-750  என்ற பதிவு எண்களை கொண்ட மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் ஜனவரி 22 ஆம் தேதி அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய  நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கூறியதாவது,

"சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோல இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது மற்றும் இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் ; ஒரு கொலையை மறைக்க இத்தனை கொலைகளா..? – தென்ஆப்பிரிக்காவில் நடந்த கொடூரம்..!

மேலும், இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள், தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிப்பதோடு, மீனவ மக்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவச் சமூகங்களின் கலாச்சார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண உரிய வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மீனவர்கள் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவினை அமைப்பதன் மூலம் இது சாத்தியமாகும்.

அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோல கைது செய்யப்படுவதைத் தவிர்க்கவும். இந்திய மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாகவும், உரிய வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கைக் குழுவினை கூட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும், மீனவர்களின் படகுகளையும் விரைந்து விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Tags :
Advertisement