For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாராட்டு மழையில் நனையும் பெண் ராணுவ அதிகாரி! - யார் இந்த சீதா ஷெல்கே?

05:47 PM Aug 03, 2024 IST | Web Editor
பாராட்டு மழையில் நனையும் பெண் ராணுவ அதிகாரி    யார் இந்த சீதா ஷெல்கே
Advertisement

கேரளா மாநிலத்தில் 144 வீரர்களுடன் பணியாற்றி இரும்பு பாலம் அமைத்த இரும்பு பெண் சீதா ஷெல்கே பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

Advertisement

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால்  400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர். தற்போதுவரை 1000த்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். ஆனால் 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தோண்ட தோண்ட சடலங்கள் வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இதையும் படியுங்கள் : உசிலம்பட்டி அருகே ஆடிப் பெருக்கையொட்டி “தாய் மாமன் தினம்” கொண்டாட்டம்!

இந்நிலையில், கேரளத்தின் பெய்த கனமழையால் பெய்லி பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனையடுத்து, நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கு சிக்கல் ஏற்பட்டது.

24 டன் எடை கொண்ட இந்தப் பாலம் 90 டன் வரையிலான எடையைத் தாங்கக்கூடியது. இந்நிலையில், இடிந்த பெய்லி பாலத்தினை சரிசெய்வதற்கு இந்திய ராணுவப்படையினர் கடந்த மூன்று நாட்களாக, கனமழையிலும் போராடி வந்தனர்.ராணுவ வீரர்கள் 190 அடி நீளமுள்ள பெய்லி பாலத்தை கட்டும் பணியை ஆகஸ்ட் 1ம் தேதி மாலையில் முழுவதுமாக முடித்தனர். இதனை தொடர்ந்து, 350 பேர் கொண்ட ராணுவக் குழுவினர், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

போர்க்கால அடிப்படையிலான பணி என்ற சொல்லிற்கு சவாலான இந்த பாலத்தை அமைத்து உயிரூட்டியிருக்கிறது இந்திய ராணுவம் என மக்கள் பாராட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, இந்தப் பாலம் அமைய முக்கிய பங்காற்றிய ராணுவ அதிகாரியான சீதா ஷெல்கேவின் அர்ப்பணிப்பை, ஆளுமையை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

யார் இந்த சீதா ஷெல்கே ?

  • மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சீதா ஷெல்கே கடந்த 2012 -ம் ஆண்டு ராணுவ சேவையில் இணைந்தார்.
  • OTA எனப்படும் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சியை நிறைவு செய்தார்.
  • MEG எனப்படும் பெங்களூருவில் உள்ள ராணுவப் பிரிவான மெட்ராஸ் பொறியியல் குழுவில் உள்ள அதிகாரிகளில் ஒரே பெண்ணாக தற்போது பணியாற்றி வருகிறார்.
  • போர்க்களங்களில் ராணுவ படைகள் முன்னேற பாதையை சீரமைப்பது, கண்ணிவெடிகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்வது மற்றும் இக்கட்டான இடங்களில் தற்காலிகப் பாலங்கள் அமைப்பதில் நிபுணத்துவம் கொண்டவராக சீதா ஷெல்கே திகழ்கிறார்.
Tags :
Advertisement