For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அஜித்துடன் மிரட்டிய ஆர்ஜுன் தாஸ்... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி பதிவு!

05:05 PM Apr 12, 2025 IST | Web Editor
அஜித்துடன் மிரட்டிய ஆர்ஜுன் தாஸ்    ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி பதிவு
Advertisement

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் பிரபு, பிரசன்னா, த்ரிஷா, யோகிபாபு, கிங்ஸ்லி என பலர் நடித்துள்ளனர். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் ஆர்ஜுன் தான் இரட்டை வேடத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

கலவையான விமர்சனங்களை படம் பெற்றாலும், அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். காரணம் அஜித்தின் விண்டேஜ் லுக்ஸ், பேமஸ் டைலாக்ஸ் எல்லாம் மீண்டும் படத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஜானி, ஜாமி என இரட்டை வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ள அர்ஜுன்தாஸ், ரசிகர்களின் பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;

உங்கள் அனைவரின் அன்புக்கும் மிக்க நன்றி. மிகவும் தன்னடக்கமாக உணர்கிறேன். இந்தப் பாராட்டுகள் எனக்கு சொந்தமானதல்ல. 2013இல் இருந்தே என் மீது நம்பிக்கை வைத்த அஜித் சார், என்னை நம்பி படத்தில் வாய்ப்பளித்த சகோதரர் ஆதிக் ரவிச்சந்திரன் இருவருக்குமே சேரும்.

லாட்ஸ் ஆஃப் லவ் ஜேஜே ( ஜானி, ஜாமி) எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement