அரியலூர் - ஜெயங்கொண்டத்தில் போதையில் பேருந்து கண்ணடியை உடைத்த நபர் கைது!
அரியலூர் மாவட்டம் ஜெயகொண்டம் பேருந்து நிலையத்தில் போதையில் பேருந்து கண்ணாடியை உடைத்த நபர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அலாவுதீன் நகரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். திருச்சியில் கோழிக்கடையில் வேலை செய்யும் இவர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார்.
அப்போது போதையில் இருந்த ஜாகிர் உசேன் விருத்தாசலம் நோக்கி செல்வதற்காக
புறப்பட்ட அரசு பேருந்து எதிரே நின்றதாகவும் டிரைவர் ஒதுங்கி நிற்கும்படி
கூறியதாகவும் தெரிகிறது.
இதில் கோவமான ஜாகிர் உசேன் போதையின் உச்சத்திற்கே சென்ற நிலையில் தன்மீது
பேருந்தை ஏற்ற வருகிறாயா? எனக்கூறி பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஜெயங்கொண்டம்
காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ஜாகிர் உசேனை
கைது செய்து விசாரித்தனர்.
அப்போது அவர் நான் ஊருக்கு செல்ல பேருந்து நிலையத்தில் நின்ற பொழுது என் மீது
பேருந்தை ஏற்ற முயற்சித்தனர் அதனால் தான் கண்ணாடியை உடைத்தேன்
என கூறியுள்ளார்.
பின்பு போலீசார் அவரை சோதனை செய்ததில் கையில் மறைத்து வைத்திருந்த 50 கிராம்
கஞ்சாவையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.