திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!
அரசு முறை பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Tamil Nadu Investors First Port of Call) கலந்துகொண்டு, தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து முதலமைச்சர் உரையாற்றினார். பிப். 07 ஆம் தேதி முதலமைச்சர் தமிழ்நாடு திரும்ப உள்ளார்.
இதையும் படியுங்கள் : கின்னஸ் சாதனை படைத்த 88 வயதான ‘கேமர் தாத்தா’..!
இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றன.தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அக்கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் ஸ்பெயினில் இருந்தபடி காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் நிர்வாகிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.