“பயப்படுகிறீர்களா மோடி?” - செல்வபெருந்தகை தொடுத்த 10 கேள்விகள்...
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரான செல்வபெருந்தகை பயப்படுகிறீர்களா மோடி என கேட்டு குற்றச்சாடுக்களை அடுக்கியுள்ளார்.
நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரான செல்வபெருந்தகை பயப்படுகிறீர்களா மோடி என கேட்டு குற்றச்சாடுக்களை அடுக்கியுள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கி விட்டீர்கள் என்றும், . எதிர்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பது:
பயப்படுகிறீர்களா மோடி ?
1. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கி விட்டீர்கள்
2. எதிர்கட்சித் தலைவர்கள் தொடர் கைது
3. ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்து பார்த்தீர்கள்
4. தேர்தல் நிதிப் பத்திரம் மூலம் பாஜக பல்லாயிரம் கோடி வசூல்
5. அமித்ஷாவிடம் பணியாற்றியவர் தேர்தல் ஆணையராக நியமனம்
6. பல கட்டமாக வாக்குப் பதிவு
7. வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கான ஓப்புகைச் சீட்டை எண்ண மறுப்பு
8. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் பெட்ரோல் , டீசல் , கேஸ் விலை குறைப்பு
9. ஊடகங்களில் 90 விழுக்காட்டை விலைக்கு வாங்கியாகிவிட்டது
10. சமூக ஊடகங்களில் பாஜக விற்கு எதிரான எந்த செய்திக்கும் ரீச் இல்லாத படி செய்தாச்சு.
பயப்படுகிறீர்களா மோடி ?
1. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கி விட்டீர்கள்
2. எதிர்கட்சித் தலைவர்கள் தொடர் கைது
3. ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்து பார்த்தீர்கள்
4. தேர்தல் நிதிப் பத்திரம் மூலம் பாஜக பல்லாயிரம் கோடி வசூல்
5. அமித்ஷாவிடம் பணியாற்றியவர் தேர்தல்… pic.twitter.com/pNnjoJF7xW
— Selvaperunthagai K (@SPK_TNCC) March 23, 2024