For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அடக்குனா அடங்குற ஆளா நீ.." - இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி..!

06:34 AM Jan 17, 2024 IST | Web Editor
 அடக்குனா அடங்குற ஆளா நீ      இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி
Advertisement

பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3 வது ஜல்லிக்கட்டாக மதுரை அலங்கால்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.

Advertisement

பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3 வது ஜல்லிக்கட்டாக மதுரை அலங்கால்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்

காலை 7 மணிக்கு தொடங்கவுள்ள ஜல்லிக்கட்டில் 1,200 காளைகள் மற்றும் 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவர், ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இறுதி சுற்றில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

காளையின் கொம்பு மற்றும் வாலை பிடித்தால் அந்த மாடுபிடி வீரர் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். வாடிவாசலிருந்து வரும் காளையை ஒரு மாடுபிடி வீரர் மட்டுமே பிடிக்க வேண்டும். வாடிவாசலிருந்து எல்லை கோடு வரை காளையின் திமிலை பிடிக்க வேண்டும் அல்லது காளையின் 3 சுற்றுக்கு திமிலை பிடிக்க வேண்டும்

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளில் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு 8மீ உயரத்திற்கு 2 அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் காயம் அடையாமல் இருக்க தென்னை நார்களால் மெத்தை போல அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதி காளைகள் வரிசையில் நிற்கும் பகுதி, மாடுபிடி வீரர்கள் பரிசோதிக்கும் பகுதி மற்றும் காளைகளை சேகரிக்கும் பகுதி என அனைத்து பகுதிகளிலும் 200 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது

முதலிடத்திற்கு வரும் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர் தலா ஒரு சொகுசு கார் என 2 சொகுசு கார்கள் பரிசாக வழங்கப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு உடனுக்குடன் தங்கம், வெள்ளி காசுகள், இரு சக்கர வாகனம், மிக்சி, பேன், சைக்கிள், கிரைண்டர், குக்கர், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

காலை 7 மணிக்கு தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியோட்டி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவின் உமேஷ் தலைமையில் 2,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான QR கோடுடன் கூடிய அனுமதி சீட்டுடன் ஒரே நபர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்படும்.

அவசரகால மருத்துவ தேவைக்காக மருத்துவக்குழுக்களும், கால்நடை மருத்துக் குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தனித்தனியாக மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு தனித்தனி நிறத்தில் சீருடைகள் வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

Tags :
Advertisement