For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சபரிமலை மற்றும் ஹஜ் யாத்திரிகர்களுக்கு KSRTC பேருந்துகளில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா? - Fact Check

02:07 PM Dec 06, 2024 IST | Web Editor
சபரிமலை மற்றும் ஹஜ் யாத்திரிகர்களுக்கு ksrtc பேருந்துகளில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா    fact check
Advertisement

This News Fact Checked by ‘Newsmeter

Advertisement

கேரள அரசின் கீழ் இயங்கும் KSRTC பேருந்துகளில் சபரிமலை மற்றும் ஹஜ் செல்லும் பயணிகளுக்கு வெவ்வேறு கட்டணங்கள் வசூலீக்கப்படுவதாகவும் , மதபாகுபாடு காட்டப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி வைரலானது.

கேரள அரசின் கீழ் இயங்கும் KSRTC பேருந்துகளில் சபரிமலை மற்றும் ஹஜ் செல்லும் பயணிகளுக்கு வெவ்வேறு கட்டணங்கள் வசூலீக்கப்படுவதாகவும் , மதபாகுபாடு காட்டப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி வைரலானது. KSRTC பேருந்தில் ஓட்டப்பட்ட ஸ்டிக்கர் படம் மற்றும் சில செய்தி அறிக்கைகள் அடங்கிய படம் ஆகியவை அரசாங்கத்தின் மத பாகுபாடுகளைக் குற்றம் சாட்டி பிரச்சாரத்தில் பகிரப்பட்டுள்ளன.

அதன்படி சபரிமலை யாத்ரீகர்களுக்கான 35% கூடுதல் கட்டணம் குறித்த செய்தித்தாளில் கட்டுரையுடன், KSRTCயின் முன்பகுதியின் படமும் , அத்ஏபோல ஹஜ் பயணிகளுக்கு பேருந்தில் 30% தள்ளுபடி என்ற ஸ்டிக்கர்களும் இடம்பெற்ற பதிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உண்மைச் சரிபார்ப்பு:

சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த விளம்பரத்தை உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தியதில் அது தவறானது என்றும் இரண்டு படங்களும் பழையவை என்றும் தெரியவந்தது. KSRTC பேருந்தின் முன் 30% தள்ளுபடி என்கிற ஸ்டிக்கர் ஒட்டியிருந்த படம்தான் முதலில் சரிபார்த்தோம். அதற்காக KSRTC மற்றும் 30 சதவிகிதம் போன்ற முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுள் தேடலில் ஈடுபட்டபோது சில ஊடக அறிக்கைகள் கிடைத்தன. KSRTC புதிதாகப் பெற்ற வழித்தடங்களில் 140 கிமீ தூரத்திற்கு அதிகமாக பயணம் செய்வோருக்கு 30 சதவீத கட்டணச் சலுகையை வழங்குகிறது என்ற செய்தி 13-14 ஏப்ரல் 2023 அன்று பெரும்பாலான முக்கிய ஊடகங்களில் வெளியிடப்பட்டது. தனியார் பேருந்துகளின் சட்டவிரோத சேவையை தடுக்கவும். பயணிகளை சுவரும் வகையிலும் கட்டண குறைப்பு அமல்படுத்தப்படுகிறது.வியாநெட் செய்தி அறிக்தைசெய்கிறேன்

தனியார் பேருந்துகள் ஏகபோகமாக இயங்கி வந்த வழித்தடங்களை கே.எஸ்.ஆர்.டி.சி கையகப்படுத்திய பிறகு. நீதிமன்ற உத்தரவின் பேரில் தனியார் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு, கே.எஸ்.ஆர்.டி.சி-க்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்ட பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல 223 சூப்பர் கிளாஸ் சேவைகளுக்கு விலக்கு என்கிற தலைப்பில் தி இந்து ஏப்ரல் 14ம் தேதியும் இதே செய்தி வெளியானது. அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்கு KSRTC இன் சரிபார்க்கப்பட்ட Facebook பக்கத்தை தேடியபோது இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக 13 ஏப்ரல் 2023 அன்று வெளியிடப்பட்டது இடுகை காட்டியது

இதன் மூலம் புதிதாக 140 கி.மீட்டர் தூரம் கொண்ட 223 சேவைகளுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி 30 சதவீத கட்டண சலுகை வழங்கியுள்ளது தெளிவாகிறது. மலப்புரம். பெரிந்தல்மன்னா, மன்னார்காடு வழியாக பாலக்காடு நோக்கி பேருந்து செல்கிறது என்பது பரவி வரும் படத்திலிருந்து தெரிகிறது. இது 140 கிமீ நீளம் கொண்ட 223 பேருந்து சேவைகளில் ஒன்றாக இருக்கலாம்.

இது தவிர, குறிப்பிட்ட மத குழுக்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என்றும் KSRTC அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இதனைத் தொடர்ந்து படத்தில் கொடுக்கப்பட்ட நாளிதழ் இடம்பெற்ற செய்தி அறிக்கை சரிபார்க்கப்பட்டது. தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனையில்இ தே போன்ற பல அறிக்கைகள் 2022 இல் வெளியிடப்பட்டது. ஆனால் அப்படி எந்த புதிய செய்தியும் கிடைக்கவில்லை.

https://www.facebook.com/share/p/1BE8adyUPB

கே.எஸ்.ஆர்.டி.சி கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, இந்த பிரச்சாரம் தவறானது என்றும் திருவிழாவின் சிறப்பு கட்டணங்கள் சட்டப்பூர்வமானது என்றும் தெளிவுபடுத்தினர். பண்டிகைக் கட்டண உயர்வு தொடர்பான உத்தரவுகளும் ஆய்வு செய்யப்பட்டன. இவை மோட்டார் வாகனத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2020 வெளியான அறிவிப்பில் திருவிழா காலங்களில், 30 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.

இது தவிர, பண்டிகைக் கட்டணங்களுக்கு உட்பட்ட பல்வேறு மதங்களின் வெவ்வேறு பண்டிகைகள்/கோயில்கள் பற்றிய விவரங்களையும் அறிவிப்பில் வழங்குகிறது.

முடிவு:

KSRTC 140 கிமீக்கு மேல் தூரம் பயணம் செய்கிற பயணிகளுக்கு புதிதாக தொடங்கப்பட்ட 223 பேருந்து சேவைகளுக்கு 30 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது மற்றும் KSRTC வசூலிக்கும் கூடுதல் கட்டணம் ஒரு சிறப்பு பண்டிகைக் கட்டணம் என்பது தெளிவாகிறது. எனவே இந்த பிரச்சாரம் தவறானது என்பது தெளிவாகிறது.

Note : This story was originally published by ‘Newsmeter‘ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement