For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் அர்ச்சகர் நியமனங்கள் தொடங்கப்படும்" - அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் வெகு விரைவில் அர்ச்சகர்களை நியமிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
11:43 AM May 25, 2025 IST | Web Editor
ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் வெகு விரைவில் அர்ச்சகர்களை நியமிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
 ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் அர்ச்சகர் நியமனங்கள் தொடங்கப்படும்    அமைச்சர் சேகர்பாபு பேட்டி
Advertisement

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் திருக்கோயிலில் புதிய மரத்தேர் வெள்ளோட்டத்தினை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். உடன் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது,

Advertisement

"சட்டமன்ற அறிவிப்பின்போது இந்த திருக்கோவிலுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்க தேர் தொடங்கப்படும் என அறிவித்திருந்தோம். ஜனவரி மாதத்திற்குள் இந்த தங்கத்தேர் பக்தர்களுக்கு ஒப்படைக்கப்படும். 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு 4.82 கோடி ரூபாய் செலவில் கடந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. 81 லட்சம் மதிப்பீட்டில் சிதலமடைந்த தேர் புதுப்பிக்கப்பட்டது இன்று வெள்ளோட்டம் காணப்பட்டது என தெரிவித்தார்.

மேலும் இந்த திருக்கோயிலில் 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாப்பு கொட்டகை அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 150, 200 கோடி என்ற அளவிற்கு கூட திருப்பணிகளுக்கு பக்தர்கள் உபயோதாரர் நிதியை கொடுத்திருக்க மாட்டார்கள், ஆனால் இந்த ஆட்சிகள் தான் 1300 கோடி ரூபாய் என்ற அளவிற்கு உபயதாரர் நிதி வந்துள்ளது.

ஆகம விதிக்கு உட்படாத கோயிலுக்கு அனைத்து சாதியனரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் பணிகள் முடிந்ததா அதற்கான பணிகள் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு,

ஆகம விதிகளுக்கு அற்ற திருக்கோவில்களுக்கு துறை சார்ந்த வழக்கறிஞர்களோடு உச்சநீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமாக யார் யாரெல்லாம் ஆஜர் ஆனார்களோ அவர்களை வைத்து கலந்தாலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறோம். வெகு விரைவில் ஆகம விதிகளுக்கு அல்லாத திருக்கோவிலுக்கு அர்ச்சகர் நியமனங்கள் தொடங்கப்படும். ஆகம விதிகளுக்கு உட்பட்ட குழுவில் ஒருவருக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

அதற்கு உண்டான முன்னேற்பாடுகளையும் முதலமைச்சரோடு ஆலோசனை மேற்கொண்டு விரைவில் அதற்கு மாற்று நபரையும் நீதிமன்றத்தில் அந்த நபரின் பெயர் விபரங்களை தாக்கல் செய்ய இருக்கிறோம். அந்த பணிகள் முடிந்தவுடன் ஆகம விதிகளை கண்டறிகின்ற குழுவின் பணிகள் தொடங்கப்படும். ஆகம விதிகள் அல்லாத திருக்கோவில்களுக்கு வெகு விரைவில் அர்ச்சகங்களை நியமிக்கின்ற பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும் பேசியவர், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 10 கல்லூரிகள் செயல்படுகிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கல்லூரியில் பயின்ற 241 பேருக்கு பணி கிடைத்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 25 பள்ளிகள் செயல்படுகிறது, அதில் 25 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர், அதில் மருதமலையில் இருக்கக்கூடிய பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் முதல்வர் படைப்பகம் தொடங்க இருக்கிறோம். முதல்வர் தோற்றுவித்த படைப்பகத்தில் பயின்ற மாணவர்களில் ஆறு பேர் டிஎன்பிசி தேர்வில் முதலிடம் பெற்றுள்ளனர். அதுவும் தொடங்கி ஆறு மாதத்திற்குள்ளாக என கூறினார்.

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு குறித்தான கேள்விக்கு, திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு குறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க சொன்னார்கள். ஐந்து பேர் கொண்ட குழு
அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதை நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டு நீதிமன்றம் என்ன கூறுகிறது எந்த முகூர்த்தத்தில் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என நீதிமன்ற வழிகாட்டுதலோடு கொடுத்து தரும் முகூர்த்தத்தில் திருச்செந்தூர் கோயில் குடமுழுக்க நடைபெறும்.

திருப்பரங்குன்றத்தில் அடுத்த மாதம் 14ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. திருச்செந்தூரில் ஜூலை மாதம் 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. பழனியில் கடந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது திருத்தணியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மருதமலையில் மின் தூக்கி அமைக்கப்பட்டு இருக்கிறது. 184 அடி உயரத்தில் முருகர் சிலை ஆசியாவில் மிக உயரமான சிலை அமைக்கப்பட இருக்கிறது. சுவாமி மலையிலும் மின்தூக்கி அமைக்கப்பட்டிருக்கிறது இப்படி அறுபடை முருகன் கோவிலில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

முதலமைச்சர் டெல்லி பயணம் குறித்து எதிர்கட்சிகள் விமர்சனம் குறித்தான கேள்விக்கு, பிடிப்பதும் வெள்ளை குடையும் அல்ல காவி குடையும் இல்லை என்று முதலமைச்சர் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். ஒன்றியத்தின் இரும்பு மனிதர் என்று முதலமைச்சர் போற்றப்படுகிறார். முதலமைச்சர் இதனை டெல்லியில் அமர்ந்து இந்த பதிலை சொல்லி இருக்கிறார் என்றால் அவரது உறுதி எப்படி இருக்கும் என பாருங்கள் என தெரிவித்தார்.

டாஸ்மாக் என்கின்ற கொள்ளை கொடியுடன் முதலமைச்சர் டெல்லி சென்றுள்ளார் என்ற தமிழிசை சௌந்தரராஜன் பேசியது குறித்தான கேள்விக்கு, தமிழிசை பேசுவதற்கு ஒன்றுமில்லை இப்படி ஏதாவது பேசிக் கொண்டு அங்கே அங்கீகாரம் பெற வேண்டும் என நினைக்கிற தமிழிசை ஒரு சவாலாக சொல்கிறேன்.

சென்னையில் ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றியிட்டு காட்டட்டும் எனவும் தொடர்ந்து அவருக்கு தோல்வியை தந்து கொண்டிருக்கிறது திமுக தான் எனவும் சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் அவருக்கு தோல்வியை கொடுத்து ஓடவிட்டது திமுக தான்.
வருகின்ற தேர்தலில் சென்னையில் நிற்பதாக தகவல் இருக்கிறது. நின்று பார்க்கட்டும் திமுக வென்று காட்டும் என தெரிவித்தார்.

Tags :
Advertisement