For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஏப்.18 உலக பாரம்பரிய தினம் - தாஜ்மஹால், மாமல்லபுரம் உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டுகளிக்க இன்று கட்டணமில்லை!

உலக பாரம்பரிய தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் தாஜ்மஹால், மாமல்லபுரம் போன்ற புராதன சின்னங்களை மக்கள் இன்று இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது
08:20 AM Apr 18, 2025 IST | Web Editor
ஏப் 18 உலக பாரம்பரிய தினம்   தாஜ்மஹால்  மாமல்லபுரம் உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டுகளிக்க இன்று கட்டணமில்லை
Advertisement

ஒரு நாடு மற்றும் அந்நாட்டு மக்களின் அடையாளமாக இருப்பது அந்நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம்தான். தங்களது நாடுகளின் பாரம்பரியங்கள் குறித்து உலக நாடுகளின் முன்னர் பெருமையுடன் சொல்வதற்கென்றே ஒவ்வொரு நாடுகளும் பாரம்பரியங்களை உணர்த்தும் புராதன சின்னங்களை போற்றி பாதுகாத்து வருகிறது.

Advertisement

அந்த வகையில் உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரிய, கலாச்சார நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினமாக யுனெஸ்கோவால் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக் கருத்தை முன்வைத்து யுனெஸ்கோ இந்த நாளை கடைபிடிக்கிறது. இதன் ஒருபகுதியக இந்த ஆண்டு  'பேரழிவு, போர்களில் இருந்து பாரம்பரியத்துக்கு ஆபத்து: 60 ஆண்டுகால நடவடிக்கையில் இருந்து தயார்நிலை, கற்றல்' என்கிற மையக்கருத்தை முன்வைத்து உலக பாரம்பரிய தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகின் பாரம்பரிய பண்பாட்டு சின்னங்களை பட்டியலிட்டு, அவற்றை யுனெஸ்கோ பாதுகாத்து வருகிறது. இதில் இந்தியாவில் 43 இடங்கள் இடம்பெற்றுள்ளது.

இன்று உலக பாரம்பரிய தினம் கடைபிடிக்கப்படும் நிலையில்  இந்தியா முழுவதும் உள்ள இந்தியத் தொல்லியல் துறையின் நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுவோருக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொல்லியல் துறை பாதுகாப்பின் கீழ் 3,698 நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்களை கட்டணமின்றி இன்று ஒருநாள் கண்டுகளிக்கலாம்

இதன்படி உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் உட்பட மற்றும் தொல்லியல் துறையின் கீழ் உள்ள புராதன சின்னங்களை மக்கள் கண்டுகளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Tags :
Advertisement