For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்" - ரயில்வே அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில் !

தமிழகத்தில் ரூ.4 ஆயிரத்து 769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலை மேம்பாலங்கள், சாலைக் கீழ்ப்பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் தகவல் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
08:03 AM Mar 13, 2025 IST | Web Editor
 தமிழகத்தில் ரூ 4 769 கோடி மதிப்பீட்டில் சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்    ரயில்வே அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில்
Advertisement

நாடாளுமன்றத்தில் நேற்று (மார்ச்.12) நாமக்கல் தொகுதி திமுக உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூர்வமாக பதில் அளித்திருந்தார். அதில்,

Advertisement

"01.02.2025-ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 250 சாலை மேம்பாலம் சாலைக் கீழ்ப்பாலம் பணிகள் ரூ.4 ஆயிரத்து 769 கோடி செலவில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில், 88 எண்ணிக்கையிலான பணிகள் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் மாநில அரசால் மூடல் போன்றவற்றுக்கு ஒப்புதல் ஆகியவை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சேலம் கோட்டத்தின் ஈரோடு- திருச்சிராப்பள்ளி பிரிவில் உள்ள ஈரோடு மற்றும் சாவடிபாளையம் நிலையங்களுக்கு இடையில் (கொக்கராயன்பேட்டை) லெவல் கிராசிங்கிற்கு (எண் 5) பதிலாக இரண்டுவழி சாலை மேம்பாலம் கட்டுவதற்கான பணி 2020-21 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணி இரட்டை நிறுவன அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 2023இல், தமிழ்நாடு மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறை, வைப்புத்தொகை அடிப்படையில் கூடுதலாக இரண்டு பாதைகளைக் கோரியது. அதன்படி, நான்கு பாதைகளுக்கான (ஆர்ஓபி) பொது ஏற்பாடு வரைதல் (ஜிஏடி) ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement