#TrainAccident | 13 அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே சம்மன்!
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ஏற்பட்ட ரயில் விபத்து தொடக்பாக 13 அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே சம்மன் அனுப்பியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்து ஏற்பட்டது. ரயில்கள் மோதிக் கொண்ட வேகத்தில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.
சிக்னல் கோளாறு காரணமாக இந்த ரயில் விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பான யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில், 2 ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தடம் புரண்ட 5 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 7 பெட்டிகளை அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படியுங்கள் : நீங்க நம்பாவிட்டாலும் அதான் நெசம்… #Sahara-வில் வெள்ளம்!
இந்நிலையில், ரயில் விபத்து குறித்து 13 அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், இன்று மாலை தெற்கு ரயில்வே அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக உத்தரவிட்டப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.