நெருங்கும் புயல் | சென்னைவாசிகளே உஷார்!... இன்று மாலை வெளுக்க போகும் கனமழை...
இன்று மாலை சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, ‘மிக்ஜம்’ புயலாக வலுவடைந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, வரும் 4-ம் தேதி காலைக்குள் தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும்.
மிக்ஜாம் புயலானது கடந்த ஆறு மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கு தென் கிழக்கு திசையில் 290 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 290 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
https://www.facebook.com/tamilnaduweatherman/posts/909001973925848?ref=embed_post
இந்நிலையில், புயல் தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், “ நாளை காலை மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகில் வரும். அப்போது அதிகபட்சமான மேகக்கூட்டங்கள் நகர்ந்து வரக்கூடும். இதன் காரணமாக இன்று மாலை சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். சென்னைக்கு அருகில் கரையை கடக்கவில்லை என்றால் கூட புயலின் தீவிரம் மற்றும் நகரும் வேகம் பொறுத்து கனமழை கொட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.