For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நெருங்கும் தீபாவளி - களைகட்டும் ஆட்டுச் சந்தைகள்!

03:27 PM Oct 23, 2024 IST | Web Editor
நெருங்கும் தீபாவளி   களைகட்டும் ஆட்டுச் சந்தைகள்
Advertisement

தீபாவளி நெருங்கும் நிலையில் சந்தைகளில் ஆடுகளின் விற்பனை களைகட்டி வருகிறது.

Advertisement

தீபாவளி பண்டிகையானது இன்னும் சில தினங்களில் வர உள்ள நிலையில், தற்போது முதலே ஆடுகள் விற்பனையானது களை கட்டி வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், ஆடுகளின் வரத்தும் அதிகரித்து காணப்பட்டதுடன், விற்பனையும் அமோகமாக நடைப்பெற்றது. திருப்புவனத்தில் மட்டுமே வாரம்தோறும் செவ்வாய் கிழமை நடைபெறும் கால்நடை சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது.

இங்கு மதுரை, தேனி, விருதுநகர், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் ஆடு, கோழி, சேவல் வாங்க வருகை தருவார்கள். மாவட்டத்திலேயே திருப்புவனம் தாலுகாவில் தான் அதிகளவு கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. எனவே பலரும் ஆடுகள், கோழிகள் வாங்க வருகை தருவார்கள். அடுத்த வாரம் தீபாவளி திருநாள் என்பதால் பலரும் ஆடுகள் வாங்க குவிந்திருந்தனர்.

சாதாரண நாட்களில் ஆயிரத்திற்கும் குறைவான ஆடு, கோழிகளே விற்பனையாகும். தீபாவளி என்பதால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் விற்பனையாகின. 7 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ எடை கொண்ட ஆடு 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. எடைக்கும், ரகத்திற்கும் ஏற்ப 25 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகின. வியாபாரிகள் பெருமளவு குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வரும் நாட்களில் இன்னும் வியாபாரம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement