Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2026-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று (மார்ச்.15) தொடங்கியுள்ளது.
07:14 AM Mar 16, 2025 IST | Web Editor
Advertisement

நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

Advertisement

இனம், தொழில், பதவி, பாலின வேறுபாடின்றி அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த நிலையில் 2026-ம் ஆண்டுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று (மார்ச்.15) தொடங்கியுள்ளது. அதன்படி, நேற்று முதல் ஜூலை 31ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்றும் தேசிய விருதுகள் இணையதளமான https://awards.gov.in என்ற தளத்தில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான விவரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளமான https://mha.gov.in மற்றும் பத்ம விருதுகளுக்கான இணைய தளமான https://padmaawards.gov.in என்ற தளத்திலும் உள்ளன. விருதுகள் தொடர்பான விதிகள் இணையதளத்தில் https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவல்களை உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Tags :
2026announcesApplicationsCentralGovernmentinvitedPadma Awards
Advertisement
Next Article