For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மேற்குவங்க சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட #AparajitaBill - சிறப்பம்சங்கள் என்னென்ன?

05:21 PM Sep 03, 2024 IST | Web Editor
மேற்குவங்க சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட  aparajitabill   சிறப்பம்சங்கள் என்னென்ன
Advertisement

பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா, மேற்கு வங்க சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்....

Advertisement

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட மசோதா மேற்கு வங்க பேரவையில் இன்று (செப். 3) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ‘அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் மசோதா 2024’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அபராஜிதா’ என்ற வங்காள வார்த்தைக்கு ‘வெல்லமுடியாத’ என்பது பொருள். கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

  • இந்த மசோதாவில், பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு தற்போது வழங்கப்படும் தண்டனைகளை மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
  • குறிப்பாக சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 உள்ளிட்ட தேசிய சட்டங்களில் விதிக்கப்பட்டுள்ள தண்டனையில் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.
  • பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் உயிரிழந்தால் அல்லது மூளைச் சாவு அடைந்தால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
  • ஒருமுறை பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெறுபவர் மீண்டும் அதே குற்றத்தை செய்தால் கடுமையான அபராதத்துடன் மரண தண்டனை விதிக்கப்படும்.
  • மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா 2023-ல் பல்வேறு பிரிவுகளில், அபராஜிதா மசோதா திருத்தங்கள் செய்துள்ளது.
  • குறிப்பாக பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை, கூட்டு பாலியல் வன்கொடுமை, மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தல் மற்றும் அமில வீச்சு உள்ளிட்ட குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் 64, 66, 70(1), 71, 72(1), 73, 124(1), மற்றும் 124(2) ஆகிய பிரிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வயது அடிப்படையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் பிரிவுகள் 65(1), 65(2), மற்றும் 70(2) ஆகியவை இந்த மசோதாவில் தவிக்கப்பட்டுள்ளது.
  • முதல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2 மாதங்கள் என்ற விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 21 நாள்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • இருப்பினும், காவல் கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள அதிகாரிகள் உரிய காரணங்களுடன் கேட்டுக் கொண்டால் கூடுதலாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய 15 நாள்கள் அவகாசம் வழங்கப்படும்.
  • இந்த மசோதா அமலுக்கு வந்தவுடன் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் அபராஜிதா பணிக் குழுக்கள் உருவாக்கப்படும்.
  • புதிய சட்டத்தின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இந்தக் குழு விசாரணை நடத்தும். இந்த பணிக்குழு விசாரிக்கும் வழக்குகளை விரைவாக நடத்தி தீர்ப்பு வழங்குவதற்காக 52 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.
Tags :
Advertisement