அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை!
11:37 AM Feb 28, 2024 IST | Web Editor
Advertisement 
பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Advertisement 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர் சத்யா பன்னீர்செல்வம். இவரது வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவரது கணவர் பன்னீர்செல்வம் 2011-2016-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்த போது, டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி ஆணையர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இன்று காலை முதல் அவருக்கு தொடர்புடைய 5 இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இன்று காலை முதல் அவருக்கு தொடர்புடைய 5 இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.