For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை.. ரூ.6 லட்சம் பறிமுதல்!

09:33 AM Aug 03, 2024 IST | Web Editor
பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை   ரூ 6 லட்சம் பறிமுதல்
Advertisement

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.
.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கட்டட அனுமதி வழங்க, லட்சக்கணக்கில் அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் நகராட்சி அலுவலகத்தில் நேற்றிரவு 8 மணியில் இருந்து இன்று அதிகாலை 7:00 மணி வரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., நந்தகோபால் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், சரவணன், பத்மாவதி ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது பொறியாளர் மனோகரனிடம் இருந்து ரூ.84 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.  நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள இடத்திற்கு அனுமதி வழங்குவதற்காக இந்த பணத்தை லஞ்சமாக பெற்று மறைத்து வைத்தது தெரிய வந்துள்ளது. மேலும் கான்ட்ராக்டர் எடிசன் என்பவரிடம் இருந்தும் 66 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினரை கண்ட நகராட்சி ஆணையர் குமரனின் ஓட்டுநர் வெங்கடேஷன், நகராட்சி அலுவலகத்தின் காம்பவுண்டு சுவரில் இருந்து 8,000 ஆயிரம் ரூபாயை துாக்கி வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், ஆணையர் குமரன் அழுக்கு துணிகளுடன் மறைத்து ரூ.5 லட்சத்தை அவரது வீட்டிற்கு எடுத்து செல்லக் கூறியது தெரிய வந்துள்ளது. அந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புதுறை, நகராட்சி ஆணையர் குமரன், உதவி பொறியாளர் மனோகரன், டிரைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அனைவரின் வீடுகளிலும் சோதனை நடந்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

Tags :
Advertisement