Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நீட் தேர்வு ரத்து... கச்சத்தீவு மீட்பு... இந்தி எதிர்ப்பு...” - விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

11:14 AM Apr 09, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார்.

Advertisement

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் ஜெயங்கொண்டாபுரம் பகுதியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்

தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறது. இந்நிலையில், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் இன்று (ஏப். 9) ஜெயங்கொண்டாபுரம் பகுதியில் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார். வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அமசங்கள் : 

  • ஆளுநர் பதவி ஒழிப்பு
  • ஆளுநரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கக் கூடாது
  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து
  • மாநிலங்களுக்கான உரிய நிதிப்பகிர்வு
  • அனைத்து மொழிகளிலும் அம்பேத்கர் நூல்கள்
  • அம்பேத்கர் பிறந்தநாளை அறிவுத்திருநாளாக அறிவிப்பு
  • ராமர் கோயில் கட்டுமானத்தில் ஊழல் குறித்த விசாரணை
  • கச்சத்தீவு மீட்பு
  • ஊழல் ஒழிப்பு லோக்பால்
  • தேர்தல் சீர்த்திருத்தம்
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு
  • தேர்தல் ஆணையர் நியமண சட்டம் ரத்து
  • வாக்குபதிவு முறைக்கு பதிலாக பழையபடி வாக்குத்தாள் முறை
  • விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்
விசிக தேர்தல் அறிக்கையின் முதல் பதிப்பை பெற்றுக்கொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
  • தொகுதி மறுசீரமைப்பில் தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதுகாப்பு
  • தேவையற்ற தேர்தல் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்
  • இந்தி எதிர்ப்பு
  • இந்திய மொழிகள் வளர்ச்சி ஆணையம்
  • இந்தியா முழுவதும் தமிழ்ச் செம்மொழி வாரக் கொண்டாட்டம்
  • வறுமைக் கோட்டின் உச்சவரம்பினை உயர்த்துதல்
  • 200 நாட்கள் வேலை வாய்ப்பு உறுதி சட்டம்
  • விவசாயம் மற்றும் நிலச்சீர்த்திருத்தம்
  • விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம்
  • GST வரி ஒழிப்பு
  • வருமான வரி சீரமைப்பு
  • விவசாயக் கடன் ரத்து
  • விவசாயத்திற்கு தனி பட்ஜெட்
  • பெட்ரோலியப் பொருட்களின் மீது அரசின் விலைக் கட்டுப்பாடு
  • ராணுவத்தின் நிதியைக் குறைத்து கல்விக்கான நிதியை அதிகரிப்பு
  • தனியார் மயமாதலை கைவிடல்
  • நீதித்துறையில் இட ஒதுக்கீடு
  • தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு
  • சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு
  • உயர்சாதி இட ஒதுக்கீடு ரத்து
  • அனைவருக்கும் வீடு அடிப்படை உரிமை
  • மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையே ஒழித்தல்
  • இடுகாடு பணியில் இருந்து தலித்துகளை விடுவித்தல்
  • மாநில சுயாட்சி
  • சென்னையில் உச்சநீதிமன்ற கிளை
  • மாநில அரசுகளின் வழியே உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
  • வழக்காடு மொழியாக தமிழ்
  • தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குதல்
  • தமிழ்நாட்டிற்கென தனிக் கொடி
  • கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல்
  • கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம்
  • அணுமின் நிலையங்களை மூடுதல்
  • இந்தியாவின் இரண்டாவது தலைநகராக தமிழ்நாட்டை அறிவித்தல்
  • தமிழ்நாட்டின் பொருளாதார தலைநகராக தூத்துக்குடி
  • இட ஒதுக்கீடு பாதுகாப்பு
  • அமைச்சரவையிலும் மேலவைகளிலும் இட ஒதுக்கீடு
  • ஆவணக் கொலையை தடுக்க தனிச் சட்டம்
  • பழங்குடியினருக்கு தனிப்பட்டா
  • தலித் கிருத்தவர்களை பட்டியலில் இணைத்தல்
  • பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு
  • மீனவர்களுக்கு தனி அமைச்சகம்
  • மதச் சிறுபான்மையினருக்கு தனி அமைச்சகம்
  • மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம்
  • நீட் தேர்வு ரத்து
Tags :
பானைChidambaramDMKElection2024Elections With News7TamilElections2024INDIA Allianceloksabha election 2024manifestoNews7Tamilnews7TamilUpdatesthirumavalavanVCK
Advertisement
Next Article