ஹாரி பாட்டர் வில்லனை போன்ற எறும்பு இனம் - இணையத்தில் வைரல்!
பிரபல ஹாரி பாட்டர் தொடரின் கற்பனை வில்லன் லார்ட் வோல்ட்மார்ட்டை ஒத்திருக்கக்கூடிய ஒரு எறும்பு இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு எறும்பு இனம் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் அந்த எரும்பு இனம் பிரபல ஹாரி பாட்டர் தொடரின் கற்பனையான வில்லன் லார்ட் வோல்ட்மார்ட்டை ஒத்திருந்தது. இந்த எறும்பு இனம் மெல்லியதாகவும், வெளிர் நிறமாகவும் காணப்படுகிறது. மேலும் இவை நிழலில் வாழக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு ஆஸ்திரேலியாவின் பில்பரா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனத்தின் பெயர் லெப்டானிலா வோல்ட்மார்ட்.
மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் டாக்டர் மார்க் வோங் மற்றும் பென்னலோங்கியா சுற்றுச்சூழல் ஆலோசகர் ஜேன் மெக்ரே ஆகியோர் இந்த எறும்பு இனம் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். டாக்டர் மார்க் வோங் இதன் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு சில நாட்களுக்கு முன்பு பகிரப்பட்டது. தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Introducing 𝑳𝒆𝒑𝒕𝒂𝒏𝒊𝒍𝒍𝒂 𝒗𝒐𝒍𝒅𝒆𝒎𝒐𝒓𝒕, a newly discovered ghostly and slender ant species with sharp jaws. Like the Dark Lord, 𝑳. 𝒗𝒐𝒍𝒅𝒆𝒎𝒐𝒓𝒕 ants thrive in the shadows. They live exclusively underground and are fearsome predators. https://t.co/wIkFreoYZY pic.twitter.com/pjfHeNtMuo
— Mark Wong (@MarkKLWong) April 13, 2024