For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரசின் சிறப்பு முகாமை புறக்கணிப்பதாக மாஞ்சோலை மக்கள் அறிவிப்பு!

11:44 AM Jul 04, 2024 IST | Web Editor
அரசின் சிறப்பு முகாமை புறக்கணிப்பதாக மாஞ்சோலை மக்கள் அறிவிப்பு
Advertisement

மாஞ்சோலை மலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மணிமுத்தாறில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை புறக்கணிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான, மும்பையைச் சேர்ந்த பிபிடிசி என்ற தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே, அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து, மாஞ்சோலை, நாலு முக்கு, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட தேயிலைத் தோட்ட கிராம மக்கள் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று பிபிடிசி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் மாஞ்சோலை அதனை சுற்றியுள்ளப் பகுதிகளை சேர்ந்த மக்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் அவர்கள் காலி செய்வதற்கு ஏதுவாக  ரேஷன் அட்டை மற்றும் ஆதார் அட்டை, வாக்களார் அட்டைகள் உள்ளிட்டவைகளில் முகவரிகளை மாற்றம் செய்துகொள்ளுவதற்கும், வாழ்வாதாரத்திற்கான லோன் பெறுவதற்கு ஏதுவாக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 3 நாட்கள் சிறப்பு முகாம் இன்று தொடங்கியது.

இந்த பணிக்காக சிறப்பு வட்டாட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டு சிறப்பு முகாம் தொடங்கியது. மலை கிராம மக்கள் அங்கேயே குடியிருக்க தங்களுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் அரசு சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

சார் ஆட்சியர் தலைமையிலான குழுவினர் மக்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்திய போது முகாம் சொந்த கிராமங்களிலேயே ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மணிமுத்தாறில் நடைபெறுகிறது. இந்நிலையில் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் தங்களுக்கு இந்த முகாம் தேவையில்லை எனவும், இந்த முகாமை புறக்கணிப்பதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement