For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியீடு! - படக்குழு அறிவிப்பு!

02:10 PM Jul 28, 2024 IST | Web Editor
பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியீடு    படக்குழு அறிவிப்பு
Advertisement

மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ், பாகுபலி திரைப்படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார். பாகுபலியை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் பான் இந்தியா அளவில் வெளியிடப்படுகிறது. அந்த வகையில், சாஹோ, ராதே ஷ்யாம், ஆகிய பான் இந்தியா திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.

'சலார்' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள் : திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை சாதனைகள் – பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!

இதனைத் தொடர்ந்து பிரபாஸ் ஒப்பந்தமாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் 'தி ராஜா சாப்'. இந்த திரைப்படத்தின் அறிவிப்பு முதல் தோற்றத்துடன் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. மாருதி இயக்கும் இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். பீப்பிள் மீடியாபேக்டரியின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் பிரபாஸூடன், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நாளை மாலை 5.03 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Advertisement