For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பிஞ்ச செருப்பு....." விமர்சனம் செய்த அண்ணாமலை |  பாமக, OPS, TTV யின் பதில் என்ன?  -ஆளூர் ஷ நவாஸ்  கேள்வி!

02:17 PM Mar 31, 2024 IST | Web Editor
 பிஞ்ச செருப்பு       விமர்சனம் செய்த அண்ணாமலை    பாமக  ops  ttv யின் பதில் என்ன    ஆளூர் ஷ நவாஸ்  கேள்வி
Advertisement

ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பிரச்சாரத்தில் இந்தி எதிர்ப்பை பிஞ்சு போன செருப்பு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதற்கு பலதரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (மார்ச் 29) பிரச்சாரம் செய்தார்.

அந்த பிரச்சாரத்தில் பேசிய அண்ணாமலை, "1980ல் பேசிய அதே விசயத்தை சம்பந்தமே இல்லாமல் இன்றைக்கு எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள். இந்தி, சமஸ்கிருதம், வடக்கு தெற்கு 61601 திமுக பேசிக்கொண்டிருக்கிறது. இன்னும் அந்த பிஞ்சு போன செருப்பை அவர்கள் தூக்கி எறியவில்லை”என அண்ணாமலை கூறினார்.

இதனையடுத்து, ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றிணைந்து நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அண்ணாமலை பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என பலதரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில்,  இந்தி திணிப்பு எதிர்ப்பை பிஞ்ச செருப்பு என்று இழிவு செய்த அண்ணாமலையின் பேச்சுக்கு OPS, TTV யின் பதில் என்ன? என வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷ நவாஸ் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,  'இந்தி திணிப்பு எதிர்ப்பு' என்பது இங்கு பாஜக தவிர அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு. இருமொழி என்பதே இம்மண்ணின் கோட்பாடு. அதற்காக குருதி சிந்தி, குண்டடி பட்டு, உயிர் ஈந்ததுவே நம் வரலாறு. அதை பிஞ்ச செருப்பு என்று இழிவு செய்கிறார் அ.மலை! பாமக, OPS, TTV யின் பதில் என்ன? விடாது தமிழ்நாடு!. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags :
Advertisement