"Gpay மூலம் வாக்காளர்களுக்கு அண்ணாமலை பணம் பட்டுவாடா" - திமுக வழக்கறிஞர் சரவணன் குற்றசாட்டு!
கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை Gpay மூலம் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்வதாக திமுக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்றுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இதையும் படியுங்கள் : “இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிடுகிறார்” – கெஜ்ரிவால் மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு!
இந்நிலையில், கோயம்புத்தூரில் பாஜக மாநில தலைவரும், அக் கட்சியின் தலைவருமான அண்ணாமலை, Gpay மூலமாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருவதாக திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
" கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அவரின் ஆதரவாளர்களுடன் அவிநாசி சாலையில் உள்ள தேர்தல் பணிமனையில் இருந்து Gpay மூலமாக வாக்காளர்களுக்கு பணம் அளித்து வருவதாக தெரியவந்துள்ளது.
தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்களை தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதியை மீறி தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் Gpay மூலமாக வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திமுகவின் சட்டத்துறை சார்பாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது"
இவ்வாறு திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.