For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அண்ணா பல்கலை.வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

“#யார்_அந்த_SIR என்பதை கண்டறிய அண்ணா.பல்கலை வழக்கை உடனடியாக CBI-க்கு மாற்ற வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
08:24 PM Feb 02, 2025 IST | Web Editor
“அண்ணா பல்கலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்”   எடப்பாடி பழனிசாமி
Advertisement

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

Advertisement

அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரித்து வரும் நிலையில், பத்திரிகையாளர்கள் பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளதாக செய்திகள் வருகின்றன.

பத்திரிகையாளர்கள் போன்களைப் பறிமுதல் செய்யவேண்டிய அவசியம் என்ன? FIR லீக் ஆனது முழுக்க அரசின் தவறு. அதனை பத்திரிகையாளர்கள் பக்கம் திசைதிருப்ப முயல்வது கண்டிக்கத்தக்கது.

உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டாலும், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் என்பதால், திமுக அரசு இவ்வழக்கில் ஏதேனும் அழுத்தம் தருகிறதோ என சந்தேகம் எழுகிறது.

#யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், மாநில அரசின் தலையீடற்ற, முறையான CBI விசாரணையே நீதியை வெளிக்கொணரும்!

#யார்_அந்த_SIR என்று கண்டறிய இந்த வழக்கை உடனடியாக CBI-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tags :
Advertisement