For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

11 நாட்களில் இத்தனை கோடி வசூலா? - பாக்ஸ் ஆஃபிஸை அடித்து நொறுக்கும் ‘அனிமல்’!

08:12 AM Dec 13, 2023 IST | Web Editor
11 நாட்களில் இத்தனை கோடி வசூலா    பாக்ஸ் ஆஃபிஸை அடித்து நொறுக்கும் ‘அனிமல்’
Advertisement

‘அனிமல்’  திரைப்படம் வெளியான 11 நாட்களில் ரூ.730 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளது. 

Advertisement

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள 'அனிமல்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இத்திரைப்படம் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் புதிய அப்டேட்!

முதல் நாளில் ரூ.116 கோடி வசூலித்தது. 2-வது நாளில் ரூ.236 கோடியும், 3-வது நாளில் ரூ. 356 கோடியும் வசூலித்தது. பாக்ஸ்-ஆபிஸில் சுனாமிபோல் எழுந்த  ‘அனிமல்’ தொடர்ந்து வசூலைக் குவித்து வருகிறது. 10-வது நாளில் ரூ.717.46 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், திரைப்படம் வெளியாகி 11 நாட்கள் முடந்த நிலையில், உலகளவில் ரூ.737.98 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேகத்தில் சென்றால் நிச்சயமாக அடுத்த வாரம் ரூ.1000 கோடியை வசூலிக்குமென ரன்பீர் ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement