For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆந்திர அமைச்சரவை இலாக்காக்கள் அறிவிப்பு! யார் யாருக்கு என்னென்ன துறைகள்?

04:21 PM Jun 14, 2024 IST | Web Editor
ஆந்திர அமைச்சரவை இலாக்காக்கள் அறிவிப்பு  யார் யாருக்கு என்னென்ன துறைகள்
Advertisement

புதிதாக பதவியேற்றுள்ள ஆந்திர அரசின் அமைச்சரவை இலாகா தொடர்பான விவரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம்,  ஜனசேனா,  பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.  175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும்,  25மக்களவைதொகுதிகளில் 21 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெற்றது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 சட்டப்பேரவை மற்றும் 4 மக்களவை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது.

கிருஷ்ணா மாவட்டம்,  கன்னவரம் அருகே உள்ள கேசரபள்ளி ஐடி பார்க் மைதானத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமான அரங்கில் ஜூன் 12ம் தேதி காலை 11:27 மணியளவில் சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில்,  இன்று அமைச்சரவை இலாக்கா தொடர்பான விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : “ஆணவம் அதிகமாகிவிட்டதால் பாஜக எம்பிக்களின் எண்ணிக்கையை 240 ஆக ராமர் குறைத்துவிட்டார்” – ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் பேச்சு!

சந்திரபாபு நாயுடு

  • முதல்வர் சந்திரபாபு நாயுடு - பொது நிர்வாகம்,  சட்டம் மற்றும் ஒழுங்கு, பொதுத்துறை நிறுவனங்கள், மற்றவர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்
  • துணை முதல்வர் பவன் கல்யாண் - பஞ்சாயத்து ராஜ்,  கிராம அபிவிருத்தி,  கிராமப்புற நீர் மேலாண்மை,  சுற்றுச்சூழல்,  வனம்,  அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • நாரா லோகேஷ்- மனித வள மேம்பாடு,  தகவல் தொழில்நுட்பம்,  மின்னணு மற்றும் தகவல் தொடர்புதுறைகள்

  • கிஞ்சராபு அச்சன்நாயுடு - விவசாயம்,  கூட்டுறவு,  சந்தைப்படுத்தல், கால்நடை பராமரிப்பு,  பால்வள மேம்பாடு & மீன்வளம்
  • டாக்டர் நிம்மலா ராம நாயுடு - நீர்வளத்துறை
  • கொள்ளு ரவீந்திர - சுரங்கங்கள் மற்றும் புவியியல்;  கலால் வரி
  • நடைண்டலா மனோகர் - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை
  • பொங்குரு நாராயணா - நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை
  • அனிதா வங்காளப்புடி -  உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
  • சத்திய குமார் யாதவ் - சுகாதாரம்,  குடும்ப நலன் மற்றும் மருத்துவக் கல்வி துறை
  • நஸ்யம் முகமது பாரூக் - சட்டம் மற்றும் நீதி;  சிறுபான்மையினர் நலன்
  • ஆனம் ராம்நாராயண ரெட்டி - இந்து சமய அறநிலைய நிறுவனங்கள் மற்றும் நன்கொடைகளை நிர்வகித்தல் துறை
  • பையாவுல கேசவ் -  நிதி,  திட்டமிடல்,  வணிக வரிகள் மற்றும் சட்டமன்றம்
  • அனகனி சத்ய பிரசாத் -  வருவாய்,  பதிவு மற்றும் முத்திரைகள் துறை
  • கொலுசு பார்த்தசாரதி - வீட்டுவசதி,  தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை
  • டாக்டர் டோலா பால வீராஞ்சநேய சுவாமி -  சமூக நலன்,  ஊனமுற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் கிராம தன்னார்வலர் துறை
  • கோட்டிப்பட்டி ரவிக்குமார் - மின்சாரம்
  • கந்துலா துர்கேஷ் -  சுற்றுலா,  கலாச்சாரம் & ஒலிப்பதிவு துறை
  • கும்மாடி சந்தியா ராணி- பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன;  பழங்குடியினர் நலன்
  • BC ஜனார்தன் ரெட்டி - சாலைகள் மற்றும் கட்டடங்கள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள்
  • டிஜி பரத் - தொழில் & வர்த்தகம்,  உணவு பதப்படுத்தும்முறை
  • எஸ்.சவிதா - பிற்படுத்தப்பட்டோர் நலம், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் நலன்,  கைத்தறி மற்றும் ஜவுளி துறை
  • வாசம்செட்டி சுபாஷ் - தொழிலாளர் நலன்,  தொழிற்சாலைகள், கொதிகலன்கள் & காப்பீட்டு மருத்துவ சேவைகள்
  • கொண்டபள்ளி ஸ்ரீனிவாஸ் - சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை,  வெளிநாடு வாழ் ஆந்திரர்கள் நலத்துறை
  • மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி- போக்குவரத்து மற்றும் இளைஞர் நலன் & விளையாட்டு
Tags :
Advertisement