For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்!

சென்னையில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலில் நடைபெற்ற ஆண்டாள் திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
08:22 AM Jan 14, 2025 IST | Web Editor
திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்
Advertisement

சென்னையில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலில் நடைபெற்ற ஆண்டாள் திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Advertisement

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் உள்ளது. இந்த திருக்கோயிலில் மார்கழி மாதம் கடைசி நாளான இன்று (ஜன. 14) ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. கோயிலின் வாயிலில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டாள் திருமணத்தில் பங்கேற்று முகூர்த்த பிரசாதமாகிய தேங்காயை வாங்கிச் சென்றால் திருமணம் நிச்சயம் கைக்கூடும் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு உள்ளது. இதனால் வெளிப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து முகூர்த்த தேங்காயை வாங்கிச் சென்றனர்.

முன்னதாக விசேஷ மாலை அலங்காரத்தோடு மணக்கோளத்தில் ஆண்டாள் நாச்சியார் எழுந்தருளியிருந்தார். பட்டாச்சாரியார்கள் மாலை மாற்றி கண்ணூஞ்சல் ஆடு என்ற பாடலை பாடி நடனம் ஆடினர். இதனை அடுத்து ஆண்டாளுக்கு திருமாங்கல்யம் கட்டி திருமண வைபவம் மிகச் சிறப்பாக
நடைபெற்றது.

Tags :
Advertisement