For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அதிமுகவால் தான் நீங்கள் எம்பி ஆனீர்கள்!” - அன்புமணி ராமதாஸ்-க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!

09:08 PM Apr 16, 2024 IST | Web Editor
“அதிமுகவால் தான் நீங்கள் எம்பி ஆனீர்கள் ”   அன்புமணி ராமதாஸ் க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
Advertisement

அதிமுகவுக்கு ஓட்டு போட்டால் வீண் என அன்புமணி பேசுகிறார். ஆனால் அதிமுகவிற்கு மக்கள் ஓட்டு போட்டதால் தான் அவர் மாநிலங்களவை எம்.பியாக எங்களால் தேர்வு செய்யப்பட்டார் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

Advertisement

சேலம் மாவட்டம் மேச்சேரியில், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,

“அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்த போது, இரண்டாவது இடம் வேண்டும் என கேட்டார்கள். தற்போது ஐந்தாவது இடத்திற்கு சென்று விட்டனர். அதிமுகவுக்கு ஓட்டு போட்டால் வீண் என அன்புமணி பேசுகிறார். அதிமுகவிற்கு மக்கள் ஓட்டு போட்டதால் தான், நீங்கள் எங்களால் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டீர்கள்.

அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது என்ன திட்டம் கொண்டு வந்தார். அடிமையாக இருக்க போகிறீர்கள். மக்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் சுயமாக, சுதந்திரமாக எடுத்துப் பேச வேண்டும் என்றால் நாங்கள் தனித்துப் போட்டியிட வேண்டும். உங்களுக்கு பதவி வேண்டும் என்பதற்காக கூட்டணி வைத்துள்ளீர்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்காக கூட்டணிக்கு போகவில்லை. அடிக்கடி கூட்டணி மாற்றிக் கொண்டு உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி ஒன்னுமே செய்யவில்லை என கூறுகிறார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆணையிட்டது எடப்பாடி பழனிசாமி. எங்களைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  உங்களுக்கு பதவி வேண்டும் என்பதற்காக விமர்சனம் செய்கிறீர்கள். நாங்கள் மக்களுக்காக உழைத்திருக்கிறோம். மக்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளோம். நான் ஆதாரத்துடன் எடுத்துக் கூறியுள்ளேன். கொடுத்த வாக்குறுதிகளை எப்பொழுதும் நிறைவேற்றக்கூடிய ஒரே கட்சி அதிமுக.

தமிழ்நாட்டில் அதிமுக 30 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி கொடுத்தது. கல்வி, மருத்துவம் சாலை இப்படி அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்தது அதிமுக ஆட்சியில் தான். எங்கள் மீது குற்றம் சுமத்துவதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான வேலையை பாருங்கள். கடலூரில் அன்புமணி பேசும்போது சொந்த ஊரில் உள்ளவர்களுக்கு வாக்களியுங்கள் எனக் குறிப்பிட்டார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வசிக்கின்ற வேட்பாளர் அசோகனுக்கு வாக்களியுங்கள். எங்கிருந்தோ வந்து இங்கிருந்து வெற்றி பெற்று சென்று விடுவார்கள்.

நம்முடைய வேட்பாளர் உங்கள் பகுதியை பற்றி யோசிப்பார். உங்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தருவார். உள்ளூர் வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வெற்றி பெற செய்யுங்கள். அன்புமணி நீட் தேர்வு குறித்து அடிக்கடி பேசுகிறார். நீட் தேர்வு கொண்டு வந்ததே பாஜக. அமல்படுத்தியது பாஜக. தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்கள்.

இவர்களுக்கு எப்பொழுதெல்லாம் சாதகமாக அமைய வேண்டும் என எண்ணுகிறார்களோ, அப்பொழுது எல்லாம் கூட்டணி வைத்துக் கொள்வார்கள். மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். நேரத்துக்கு தகுந்தவாறு மாறிமாறி கருத்துக்களை தெரிவிப்பார்கள்.  அவர்கள் அதிகாரத்துக்கு வரவேண்டும். ஜிகே மணி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆட்சியில் என்ன செய்தார் என்பதை சொல்லவில்லை. பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தோம் என பட்டியலிட்டு சொல்வேன். திமுகவால் சொல்ல முடியுமா? கடந்த தேர்தலில் திமுக கூட்டணியின் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் மக்கள் பிரச்னை குறித்து பேசவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் துடிப்பது மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பதுதான்.  மாநிலத்திலும் கொள்ளை அடிக்க வேண்டும், மத்தியிலும் கொள்ளை அடிக்க வேண்டும். கொள்ளையடிப்பது தான் கட்சியின் நோக்கம்.

இந்தியாவிலேயே ஊழல் செய்வதில், போதை பொருள் விற்பதில், அதிகமாக கடன் வாங்கியதில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு தான்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement