துணை முதலமைச்சருடன் அன்பில் மகேஸ் திடீர் ஆலோசனை!
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைக்கு மத்திய அரசு நிதி வழங்காத நிலையில், அரசின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை பாதிக்கும் வகையில் செயல்படுவதோடு மட்டுமல்லாமல் சர்வாதிகாரப் போக்குடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டின்
கல்வி வளர்ச்சியை பாதிக்கும் வகையில் செயல்படுவதோடு மட்டுமல்லாமல் சர்வாதிகாரப் போக்குடன் ஒன்றியக் கல்வித்துறை அமைச்சர் பேசியுள்ளார். நமக்கு வழங்க வேண்டிய நிதியை மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்ததோடு மட்டுமல்லாமல், மொழி திணிப்பிற்கான முயற்சியையும் ஒன்றிய அரசு… pic.twitter.com/TjBKXht62Y— Anbil Mahesh (@Anbil_Mahesh) February 16, 2025
நமக்கு வழங்க வேண்டிய நிதியை மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்ததோடு மட்டுமல்லாமல், மொழி திணிப்பிற்கான முயற்சியையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு தரவேண்டிய நிதியை தராமல் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இது தொடர்பான ஆவணங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டானிடம் சமர்ப்பித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்”
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.