For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அம்பானி குடும்ப திருமண முன்வைபவம்: விருந்தினர்கள் தங்குமிடம் பற்றி சாய்னா நெவால் வெளியிட்ட வீடியோ!

09:45 AM Mar 02, 2024 IST | Web Editor
அம்பானி குடும்ப திருமண முன்வைபவம்  விருந்தினர்கள் தங்குமிடம் பற்றி சாய்னா நெவால் வெளியிட்ட வீடியோ
Advertisement

 ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்ட் முன் திருமண வைபவங்களில் பங்கேற்க வந்த சாய்னா நெவால் தங்கும் மாளிகையை வீடியோவாக எடுத்து தனது சமுக வலைதளத்தில் பதிவு செய்தார். 

Advertisement

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி-நீடா அம்பானி தம்பதியரின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும்,  அவரது காதலியான ராதிகா மெர்செண்டுக்கும் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.  அதற்கான முன் திருமண வைபவங்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில்,  மார்ச் மாதம், முதல் 3 தினங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  ஏற்கனவே மகள் இஷா அம்பானி மற்றும் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணங்களை வெகு விமர்சையாக நடத்தி முடித்த முகேஷ் அம்பானி, தற்போது இளைய மகனான ஆனந்த் அம்பானி திருமணத்தையும் 1000 கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து வருகிறார்.

இதையும் படியுங்கள் : முகேஷ் அம்பானி மகன் திருமண கொண்டாட்டம்: மனைவியுடன் பங்கேற்ற மார்க் ஜுக்கர்பெர்க்!

ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லரை வர்த்தகம்,  ஜியோ தளங்கள் மற்றும் ரிலையன்ஸ் எரிசக்திப் பிரிவு ஆகியவற்றை கவனித்து வரும் ஆனந்த் அம்பானி,  தொழிலதிபர் வீரேன் மெர்செண்டின் மகளான ராதிகா மெர்செண்டை கரம் பிடிக்க உள்ளார்.  2023-ம் ஆண்டு ஜனவரி மாதமே இவர்களின் நிச்சயதார்த்தம் வெகு சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், ஜாம்நகரில் துவங்கியுள்ள முன் திருமண வைபவங்கள்,  ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையையும் அத்திசைக்கு திருப்பியுள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை ஜாம்நகரில் குவிந்துள்ளனர்.  குறிப்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்,  ஃபேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் சக்கர்பெர்க்,  டிஸ்னி நிறுவன சி.இ.ஓ பாப் இகர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான உலக பிரபலங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

இதற்காக தனி விமானம்,  உயர் ரக கார்கள்,  உயர் வசதிகள் கொண்ட தங்கும் மாளிகைகள் என அனைத்து ஏற்படுகளும் செய்யப்பட்டுள்ளன.  விழாவில் கலந்து கொள்பவர்களை கவனிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு,  அவர்கள் எதைக் கேட்டாலும் அதை மூன்று மணி நேரத்தில் கொண்டு வந்து இறக்க வேண்டுமென அம்பானி குடும்பம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிரபலங்களின் உடை,  ஒப்பனை என அனைத்தையும் கவனித்துக் கொள்ள தனித்தனி ஒப்பனையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில்,  இந்த நிகழ்வில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் கலந்து கொண்டார்.  அப்போது, சாய்னா நெவால் அந்த நிகழ்வில் பங்கேற்க உள்ள விருந்தினர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை வீடியோ பதிவாக எடுத்த தனது சமுக வலைதளத்தில் பதிவிட்டார்.  அதில், நிகழ்வில் பங்கேற்க்கும் விருந்தினர்களுக்கு  பெரிய கூடாரங்கள் அமைக்கப்படுள்ளதாக கூறினார்.  இந்த கூடாரத்தில் படுக்கை அறை, பெரிய டிவி,  வாசிப்பு மேசை உள்ளிட்டவை கொண்டு உயர் வசதிகள் கொண்ட தங்கும் மாளிகைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Tags :
Advertisement