For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் எங்கே தெரியுமா?

01:43 PM May 30, 2024 IST | Web Editor
ஆனந்த் அம்பானி   ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் எங்கே தெரியுமா
Advertisement

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட்  திருமண விழா ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. 

Advertisement

பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19, 2023-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்லாவில் குஜராத் மாநில பாரம்பரியப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆனந்த் அம்பானிக்கும்,  ராதிகா மெர்செண்டுக்கும் வருகின்ற ஜூலை மாதம் 12-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.  ஏற்கனவே மகள் இஷா அம்பானி மற்றும் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணங்களை வெகு விமர்சையாக நடத்தி முடித்த முகேஷ் அம்பானி,  தற்போது இளைய மகனான ஆனந்த் அம்பானி திருமணத்தையும் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து வருகிறார்.

சில்லுனு ஒரு காதல்” - சிறு வயது நட்பிலிருந்து காதலாக மாறிய ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் காதல் கதை... - News7 Tamil

அதற்கான முன் திருமண வைபவங்கள் குஜராத் மாநிலம் ஜாம் நகரில்,  மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது.  இந்த முன் திருமண வைபவத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன்,  ஷாருக்கான்,  சல்மான் கான்,  அமீர் கான்,  ரஜினி காந்த், சஞ்சய் தத்,  அபிஷேக் பச்சன்,  ராம் சரண்,  சயீப் அலிகான்,  ரன்பீர் சிங்,  ரன்வீர் சிங், நடிகைகள் ஐஸ்வர்யா ராய்,  கரீனா கபூர்,  தீபிகா படுகோன்,  சாரா அலிகான்,  ஆலியா பட், ஜான்வி கபூர்,  கேத்ரினா கைஃப்,  இயக்குநர் அட்லி உட்பட ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் கலந்து கொண்டனர்.

கிரிக்கெட் வீரர்கள் சச்சின்,  தோனி,  ரோகித் சர்மா,  ஹர்திக் பாண்டியா,  பிராவோ,  ரஷித் கான் உட்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்களும் விழாவில் பங்கேற்றனர். இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்தும் 1,000 – த்திற்கும் மேற்பட்ட சிறப்புவிருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

அம்பானி குடும்ப திருமண முன்வைபவம்: 3 நாட்கள் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் என்னென்ன? - News7 Tamil

இதனையடுத்து,  மே 29 முதல் தெற்கு பிரான்ஸ்  கடற்கரையோரத்தில் சொகுசு கப்பலில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் 2-வது முன் திருமண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  இவ்விழாவில் ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான், அக்ஷய் குமார், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப், விக்கி கவுஷல், ரன்பீர் கபூர், ஆலியா பட், எம்.எஸ்.தோனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து,  ஆனந்த் அம்பானிக்கும்,  ராதிகா மெர்செண்டுக்கும் வருகின்ற ஜூலை மாதம் 12-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளது.  இவர்களின் திருமணம்,  பாந்த்ரா-குர்லா வளாகத்தில் (பிகேசி) உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பாரம்பரிய இந்து முறையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்விழா ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.  அதன்படி,  ஜூலை 12 அன்று திருமண விழாவும், தொடர்ந்து ஜூலை 13 அன்று சுப ஆசீர்வாத நிகழ்ச்சியும்,  ஜூலை 14ஆம் தேதி  திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

Tags :
Advertisement